
அந்த வகையில், கணினியில் விரைவாக பணிபுரிய உருவாக்கப்பட்டவையே குறுக்கு விசைகள். அதாவது விசைப்பலகையில் உள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விசைகளை அழுத்துவதன் மூலம், நாம் செய்யவிருக்கும் ஒரு செயலை ஒரு நொடியில் செய்து முடித்துவிட பயன்படுபவைதான் இக்குறுக்கு விசைகள்.
கணினியில் பயன்படும், பயன்பாட்டு மென்பொருள்களில்(application software) தொடங்கிய இக்குறுக்குவிசைகள், தற்பொழுது ஒவ்வொரு புதிய மென்பொருள்களுக்கும் Graphic Softwar உட்பட பயன்படுத்தபடுகிறது.
உதாரணமாக போட்டோஷாப் மென்பொருளைப்(Photoshop Software) பயன்படுத்துபவர்கள் ஒரு குறிப்பிட செயலைச் செய்ய இரண்டு விசைகளை அழுத்தினாலே போதுமானது. உதாரணமாக Photoshop CS3-ல் திறந்து வைத்திருக்கும் அனைத்து விண்டோக்களையும் ஒவ்வொன்றாக தானாகவே மூட ctrl+alt+w அழுத்தலாம்.
பொதுவாக ஒரு தரவை நகல்(copy) எடுக்க ctrl+c அழுத்தி அந்த செயலை முடிக்கிறோம். அதை வேறொரு இடத்தில் பதிய ctrl+v அழுத்தி ஒட்டுகிறோம். இது அடிப்படை குறுக்கு விசைகள்.
அதுபோல ஒவ்வொரு மென்பொருள் உருவாக்குனர்களும், அம் மென்பொருளிலும் நாம் செய்ய வேண்டிய வேலைகளுக்கு ஏற்ற குறுக்கு விசைகள் உருவாக்கி வைத்துள்ளனர். அந்த குறுக்கு விசைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நேரம் மிச்சப்படுவதோடு, எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் நாம் நினைத்ததை உடனடியாக செய்ய முடிகிறது.
உதாரணமாக நாம் பயன்படுத்தும் வலை உலவியில் கூட குறுக்குவிசைகளைப் பயன்படுத்த முடியும்.
மேலும் ஒரு சில குறுக்குவிசைகள் அடங்கிய ஒரு சில பதிவுகளும் இடம்பெற்றிருக்கின்றன. அப்பதிவுகளைப் பெற நீங்கள் தங்கம்பழனி வலைத்தளத்தில் site search எனும் தேடு பெட்டியில் குறுக்கு விசைகள் என தட்டச்சிட்டு Enter தட்டுவதன் மூலம் அப்பதிவுகளை வரிசைக் கிரமமாகப் பெற முடியும்.
இவ்வாறு நாம் கணினியில் பயன்படுத்தும் எந்த ஒரு மென்பொருளாக இருந்தாலும் அதற்குரிய குறுக்கு விசைகள் உள்ளன. ஒவ்வொரு மென்பொருளுக்கும் நீங்கள் குறுக்குவிசைகளைப் பெற எண்ணினால் உங்களுக்கு இத்தளம் நிச்சயம் உதவும்.
தளத்தின் பெயர்: http://www.keyxl.com/
இத்தளத்தில்,- Microsoft apps
- Adobe apps
- Google Apps
- Web Browsers
- Email programs
- Photo/Imaging
- MP3
- HTML Editors
ஆகிய தலைப்புகளில், ஏறக்குறைய அனைத்து மென்பொருளுக்கான குறுக்கு
விசைகளையும் அளித்துள்ளார்கள். புதிய மென்பொருள்கள் ஏதேனும்
வெளிவந்திருப்பின் அவற்றிற்கான குறுக்கு விசைகளையும் நாம் இதில் பார்க்க
முடியும்.
இத்தளத்தில் உள்ள குறுக்கு விசைகள் மட்டுமல்லாமல், புதியதாக ஏதேனும்
நமக்குத் தெரிந்து குறுக்கு விசைகள் இருப்பினும் அவற்றையும் நாம்
இத்தளத்தில் இணைக்க முடியும். அதற்கான வசதியையும் இத்தளம் நமக்கு
அளிக்கிறது.
அனைத்துவித குறுக்குவிசைகளை கொடுக்கும் ஒரு அமுத சுரபியாக http://www.keyxl.com/ இத்தளம் விளங்குகிறது எனில், அது மிகையில்லை.
கருத்துரையிடுக Facebook Disqus