0

டயர் வாங்குவதில் கவனம் செலுத்துவது மிக அவசியம். நம் காரின் வகைக்கு ஏற்றது போல சிறப்பான டயர் தேர்ந்தேடுப்பது மிக அவசியம். டயர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமானவைகளை கானலாம்.

டயர் வாகனங்களுக்கான நிலையான நிலைப்பு தன்மை, சாலையில் கிரீப்யுடன் பயணிக்க, பிரேக்கிங் சமயத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும், மைலேஜ் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

tyre

1. டயர் ஆயுள்

டயரின் ஆயுள் வாகனத்தின் வகையை பொறுத்து மாறுதல் அடையும். ஹேட்ச்பேக் காரின் சராசரியாக டயர் ஆயுள்  40,000 கீமி வரை  பயணிக்க முடியும். எஸ்யூவி கார்களின் டயர் 60,000 கீமி மேல் பயணிக்க முடியும். இவைகளும் தாங்கள் பயணிக்கும் சாலையின் தன்மைகளை பொறுத்து மாறலாம்.  மேலும் சரியான அழுத்தம் போன்றவறை பராமரிக்க தவறினாலும் ஆயுள் குறையும்.

 டயர் தேர்வு

டயர் தேர்ந்தேடுப்பதில் கவனம் செலுத்துதல் அவசியம் உங்கள் வாகனங்களை பொறுத்து டயர் தேர்வு இருத்தல் மிக அவசியம். உங்கள் வாகனம் எஸ்யூவி என்றால் த்ரட் ஆழமாகவும் பேட்டரன் நல்ல அகலமாகவும் இருக்கும்.
ஆஃப் ரோடு பயணத்திற்க்கான வாகனமா என பயன்பாட்டை பொறுத்து உங்கள் தயாரிப்பாளர் மிக சிறப்பான உயர்தர டயரை பயன்படுத்திருப்பார்கள். ஆனால் நீங்கள் வாங்குபோது விலை குறைவான டயரை கூட தேர்ந்தேடுப்பீர்கள். அவ்வாறு வாங்கும் பொழுதும் தயாரிப்பாளரின் பரிந்துரைக்கும் டயராக இருத்தல் நலம்.

ட்யூப்லெஸ் டயர் அல்லது டியூப் டயர்

ட்யூப்லெஸ் டயர் தேர்ந்தேடுப்பதே சிறந்தது டியூப் டயரை விட. இதுபற்றி தனியான பகிர்வை பார்க்கலாம்.

டயர் விவர குறிப்புகள்

டயரின் முழுமையான விபரங்களை டயரில் பதிக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு அறியலாம். குறியீடுகளை கொண்டு மிக பொருத்தமான டயரினை தயாரிப்பாளர் பரிந்துரைத்த டயரினை வாங்கலாம்.


முதல் கட்டமாக இந்த படத்தில் உள்ள விவரங்களை கானலாம்

ஆங்கில எழுத்துகளின் விளக்கம்
P--பயணங்களுக்கான கார் 
LT என்று குறிப்பிட்டுருந்தால் சிறிய ரக டிரக் டயர்
205-- டயரின் அகலம்
65-- பக்கவாட்டு உயரம்
R- டயர் ரேடியல்
16-  ரிம் அளவு
95- எடையை தாங்கும் 95 என்றால் 690கீகி தாங்கும்.
V-  அதிகப்பட்ச வேகத்தை தாங்கும். V என்பதற்க்கு 240Kph ஆகும்.
தயாரிப்பு தேதி DOT GHYT 0913 என்று குறிப்பிட்டிருந்தால் அதில், கடைசியில் வரும் முதல் 09 என்ற எண்கள் 09வது வாரத்தையும், இரண்டாவது 13 எண்கள் 2012ம் ஆண்டையும் குறிக்கும்.

டயர் வேகத்தை குறிப்பீடும் ஆங்கில எழுத்தக்களின் விவரங்கள்able
Speed SymbolSpeed (km/h)
L120
M130
N140
P150
Q160
R170
S180
T190
U200
H210
V240
W270
Y
ZR
300
340மேல்



Tyre specifications

கருத்துரையிடுக Disqus

 
Top