என் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரது மேஜையில், பைல்களாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. "அலுவலக பைல்களை வீட்டிற்கு கொண்டு வந்து
பார்க்கிறீர்களா?' என கேட்டேன்.
"இல்லை. இதெல்லாம் வீட்டு சமாச்சாரம் தான்' என்று அவர் சொன்ன விஷயம் வியப்படைய வைத்தது. "வீட்டு வரி, தண்ணீர் வரி, கரன்ட் பில், பிள்ளைகளின் அட்மிஷன், வரவு செலவு, வீட்டுக்கு வரும் அழைப்பிதழ்கள் என, எல்லாவற்றையும் தனித்தனியாக உறைகள் போட்டு, அவற்றின் மேலே, அதன் தலைப்பை எழுதி வைத்து விடுவேன். மேலும், கரன்ட் பில், வீட்டு வரி கட்ட வேண்டிய தேதி, போன்ற விஷயங்களை பென்சிலால் குறித்து வைப்பேன்.
"ஒவ்வொரு உறையிலும், அது தொடர்பான தபால்கள் வர வர, அவற்றை, "டேக்' போட்டு இணைத்து விடுவேன். இதனால், எந்த பில்லை எங்கே வைத்தோம் என்று தேட வேண்டியதில்லை. எல்லாவற்றையும் மேஜையில் வைத்திருப்பதால் பார்க்கவும், எடுக்கவும், வீட்டில் உள்ள அனைவரும் கையாள்வதற்கு எளிதாகவும் இருக்கிறது' என்றார்.
நண்பரின் யோசனையை நாமும் பின்பற்றலாமே!
கருத்துரையிடுக Facebook Disqus