0
 
கணவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, துடித்துப் போய், ஊண், உறக்கமின்றி, கண்ணை இமை காப்பது போல் கணவனுக்கு அருகில் இருந்து பணிவிடை செய்கின்றனர் பெண்கள். ஆனால், மனைவிக்கு உடல்நிலை சரியில்லை எனில், உடனே, "பணம் தருகிறேன் உங்க அம்மா வீட்டுக்கு போய் டாக்டரிடம் காண்பித்து, சுகமான பிறகு வா...' என கூறுகின்றனர் இந்த ஆண்கள்.

இது, எந்த விதத்தில் நியாயம்? உங்களுக்குள்ள அதே உணர்வுகளும், எதிர்பார்ப்புகளும்தானே, மனைவிக்கும் இருக்கும். தாலி கட்டியதிலிருந்து கணவரே தஞ்சம் என வந்து, கணவருடைய இன்ப, துன்பத்தில் பங்கெடுக்கும் மனைவிக்கு, உடல்நிலை சரியில்லை என்றதும், அவளை தாய்வீடு விரட்டப் பார்க்கிறீர்களே... இது நியாயமா?

"இப்போ, உடம்புக்கு எப்படிம்மா இருக்கு?' என்று ஒரு வார்த்தை ஆறுதலாக கேட்டாலே போதுமே... நோய் பறந்து போகும் அவளிடமிருந்து. அதை விடுத்து, பிறந்த வீட்டிற்கு போகச் சொல்லும் பண்பற்றவர்களாக நடந்து கொள்ளாதீர்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top