என் தோழி வீட்டிற்குச் சென்றிருந்தேன். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்த போது, 10வது படிக்கும், அவளது இளைய மகன் வந்தான். அவனிடம், எங்கள் இருவருக்கும், டீ போட்டு கொண்டு வரும்படி கூறினாள் தோழி.
"ஆம்பிளை பிள்ளையிடம் போய், இந்த வேலையை சொல்கிறாயே... மனதுக்கு சங்கடமாக இருக்கிறது...' என்றேன். உடனே அவள், "ஆம்பிளை பிள்ளைன்னா, வீட்டு வேலை செய்யக் கூடாதா... எனக்கு பெண் குழந்தைகள் இல்லை.
இருவருமே, ஆண் பிள்ளைகள் தான். பிறகு, எனக்கு யார் உதவி செய்வர்? பெரியவன், சமையல் வேலைகளை கற்றுக் கொண்டு, உதவி செய்வான். அவன், இப்போது அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். சமையல் தெரிந்திருப்பதால், அவனுக்கு அங்கு சாப்பாட்டை பற்றிய கவலை இல்லை. அவனே வேண்டியதை சமைத்துக் கொள்கிறான். ஆணும், பெண்ணும் சமம் தான். நீயும், உன் எண்ணத்தை மாற்றிக் கொள்...' என்று பெரிய லெக்சரே கொடுத்து விட்டாள்.
அவள் சொல்வதிலும் நியாயம் உள்ளதை உணர்ந்து கொண்டேன். சமையலும் ஒரு கலை தானே! ஆண்களும் அதை கற்றுக்கொள்வது நல்லது.
கருத்துரையிடுக Facebook Disqus