0

திருமணமான புதிதில், சிறு சிறு சச்சரவுகளுக்கு எல்லாம், தாய்வீடு சென்று விடுவாள் என் மனைவி. ஒருமுறை, என் மனைவி செய்த தவறை அதிகமாக கண்டித்ததால், ரொம்ப கோபம் வந்து, தாய் வீடு சென்று விட்டாள். எனவே, நானே அவள் வீட்டிற்கு சென்று, "என் மீது தான் தவறு; மனைவி மீது தவறில்லை...' என்று, அவள் அண்ணன்மாரிடம் சொல்லி, "டீசன்ட்'டாக மன்னிப்பு கேட்டு, மனைவியை அழைத்துப் போவதாக கூறினேன்.

இதை அறிந்த என் மனைவி, "என் மீது, இவ்வளவு பாசம் வைத்திருக்கும் உங்களை, இப்படி மன்னிப்பு கேட்க வைத்து விட்டேனே...' என்று உருகி மனம் வருந்தினாள். அத்துடன், "இனி, என் வாழ்நாளில் என்ன சண்டை, சச்சரவு வந்தாலும், கோபித்துக் கொண்டு தாய் வீடு செல்ல மாட்டேன்...' என்று சொன்னதோடு, பல வருடங்களாக நிரூபித்தும் காட்டி விட்டாள்.

அன்று மட்டும் நான் கவுரவம் பார்த்து வலிய சென்று என் மனைவியை அழைக்காமல் இருந்திருந்தால், மண்ணுக்குள் இருக்கும் வைரம் போல, என் மனைவியின் நல்ல குணங்கள் தெரியாமலே போயிருக்கும்; சிறு புகைச்சல் பெரிதாகி விவாகரத்து வரை சென்றிருக்கும். இதை ஏன் சொல்கிறேன் என்றால்...

 கணவன் - மனைவி இடையே வரட்டு கவுரவம் பார்க்காதீர்;
அது உங்கள் வாழ்வையே பாழாக்கி விடும்!

கருத்துரையிடுக Disqus

 
Top