அந்த
ஊரை ஒட்டியிருந்தது ஒரு பெரிய காடு. காட்டில் அதிகமான மரங்களோடு சேர்ந்த
பெருத்த சத்தத்தோடுகூடிய ஆறும் ஓடி கொண்டிருந்தது. அந்த காட்டில்
வளர்ந்திருக்கும் மரங்களை வெட்டி விற்று அதனால் பிழைப்பை நடத்தி வந்தார்
முனுசாமி. முனுசாமிக்கு பெரிதாக படிப்பறிவு ஒன்றும் இல்லையென்றாலும்
பயபக்திகள் நிறைந்தவர்தான். என்றும்போல இன்றும் காட்டுக்கு நடையை
கட்டிவிட்டார் முனுசாமி. இன்று ஒரு பெரிய மரமாக பார்த்து வெட்டிவிட்டால்
இன்னும் இரண்டு நாட்களுக்கு அதோட விறகை வித்துட்டு ஓய்வு எடுத்துக்கலாம்னு
மனசுல நெனச்சிக்கிட்டே காட்டிற்கு நடுவில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த
ஆற்றின் கரைகளில் மரங்களை தேடி சென்றுகொண்டிருந்தான் முனுசாமி. அப்பதான்
ஓங்கி உயர்ந்து நிழல் பரப்பியிருந்த மரம் கண்ணில்பட்டது.
இப்போது முனுசாமிக்கு இந்த மரம்தான் இன்னைக்கு தீனி. அதாவது இன்னைக்கு இத வெட்டிகிட்டுபோனா அடுத்த நாளு நாளைக்கு வேலைக்கு அலையாம வீட்டுலயே இருக்கலாம்னு முனுசாமிக்கு தோணுச்சி. எடுத்துக்கிட்டுபோன கோடாளிய மரத்துக்கிட்ட வெச்சிட்டு அந்த மரத்த வெட்டுறதுக்கு தயாரானான். ஒருவழியா வெட்டவும் ஆரம்பிச்சிட்டான் முனுசாமி.
மரத்த வெட்டிக்கிட்டு இருந்தப்ப கோடாளி மரத்துக்கிட்ட சொல்லிச்சு... என்ன மன்னிச்சிடுங்க... என்னோட முதலாளி உங்கள வெட்டுறது, எனக்கு சுத்தமாவே புடிக்கல... ஆனா நான் போயி என்ன பண்ண முடியும் சொல்லுங்கன்னு தன்னோட சோகத்த மரத்துக்கிட்ட சொல்லிச்சு. அதுக்கு மரம், உன்மேல எந்த கோபமும் இல்ல... ஆனா இந்தக் காட்டுல என்ன மாதிரி ஒவ்வொரு மரமும் உருவாக நாற்பது வருஷத்துக்கும் மேலாகுது. இந்த மனுஷங்கலாம் வெட்டுறது ரொம்ப சுலபம்தான். ஆனா எங்கள மாதிரி பெரிய மரமா வளர்வதற்க்கு இந்த மனுஷனோட ஆயுளையும் தாண்டிடும். தன்னோட ஒருநாள் பொழப்புகாக என்ன வெட்டுற இந்த மனுசனுக்கு தெரியலயே, இவங்கலாம் உயிர்வாழறதுக்கே தேவையான காற்றைகூட நாங்கதான் வெளிப்படுத்துறோம்னு. எங்களோட தழைகளில் இருக்கிற பச்சயம்தான் இந்த உலகத்துல இருக்கிற மொத்த உயிர்களுக்கும் தேவையான காற்றும் மழையும் பெய்றதுக்கு தேவையான எல்லா வழிகளையும் செய்யுது. ஆனா இந்த முனுசாமி மாதிரியான மனுஷங்களுக்கு இதுலாம் தெரியாம எங்கள அழிச்சி தங்களுக்கான ஆயுளை அவங்களே குறைச்சிக்கறாங்க. இப்போ இந்த முனுசாமிக்கு ஒரு பாடம் கத்துகுடுத்தா இந்த வேலைய விட்டு வேற வேலைக்கு போயிடுவார். என்னைப்போன்ற மற்ற மரங்களையும் காப்பாத்திடலாம்னு. ஆனா அதுக்கு உன்னோட உதவி முக்கியம்னு மரம் சொல்லிச்சு. இதலாம் கேட்ட கோடாளி உடனே நான் என்ன செய்யட்டும்னு கேட்டுச்சு. என்ன வெட்டிக்கிட்டு இருக்கிறப்ப நீ அந்த கைப்பிடியிலிருந்து கழட்டிகிட்டு இந்த பக்கத்துல ஓடுற ஆத்துல விழுந்துடு, அப்புறம் நான் பார்த்துக்கிறேன்னு மரமும் தன்னோட யோசனைய சொல்லிச்சு.
இதைக்கேட்ட கோடாளி மரம் சொன்ன மாதிரியே ரொம்ப நேரமா வெட்டிகிட்டு இருந்ததால மரைகழண்டு பக்கத்துல ஓடுற ஆத்துல விழுந்திடுச்சு. முனுசாமிக்கு ஒரு நிமிஷம் உயிரே போயிட்டதுபோல இருந்தது. வேற வழி இல்லாத முனுசாமி, இந்த கோடாளிய எடுத்தே ஆகணும்னு தீர்மானம் பண்ணிட்டு ஆத்துல இறங்க முயற்சி பண்ணினார். ஆனா காட்டாற்று வெள்ளம் ரொம்ப வேகமா ஓடிக்கிட்டு இருந்தது. பயம் ஒருபக்கம் இருந்தாலும் ஆத்துல விழுந்த கோடாளிய எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம். ஒருவழியா ஆத்துல பொறுமையா இறங்கி தேட தொடங்கிட்ட முனுசாமி சற்றும் எதிர்பாராத நேரத்துல தண்ணியோட வேகம் அதிகமானதால எதிர் நீச்சல் போட முடியல. இப்ப அவனுக்கு இன்னைக்கு நாம உயிர்பிழைக்க போறது இல்ல. நம்ம பசங்கலாம் பாவம்னு பயந்தான்.
அந்த நேரம் இதயெல்லாம் பார்த்துக்கிட்டு இருந்த அந்த பெரிய மரம் தன்னோட ஆத்து பக்கமா சாய்ஞ்சி இருக்கிற கிளைய முறிந்து ஆத்துல விழு செய்தது. எப்புடியோ அத புடிச்சிக்கிட்ட முனுசாமியும் பொறுமையா ஆத்தோட வெள்ளம் குறைய ஆரம்பிச்ச பிறகு கரை வந்து சேர்ந்தான். அவனோட அதிர்ஷ்டம் அந்த கோடாளியும் கிடைச்சிடுச்சி. இப்ப கரை வந்து சேர்ந்த முனுசாமிக்கு இப்ப அந்த மரத்த பார்த்தப்ப தனக்கு உயிர்கொடுத்த சாமியா தெரிஞ்சது. இந்த மரம் இருக்கவேதான் நம்ம இப்ப உயிரோடவே இருக்கோம்னு தோணிச்சி. அப்பதான் இனிமே மரங்களே வெட்டக்கூடாது. இந்த மாதிரி மரங்கள் இருந்தாதான் பல பேருடைய உயிரக் காப்பாத்தும். இனிமே எந்த மரத்தையும் வெட்டக்கூடாதுன்னு மனசுல தீர்மானம் பண்ணிக்கிட்டான் முனுசாமி.

கருத்துரையிடுக Facebook Disqus