0
அக்யுமுலேட்டர் (Accumulators) - கூட்டிடம்

computer Accumulators
ஒரு கணிப்பொறியின் முக்கியமான பகுதிகளின் அக்யூமுலேட்டர்களில் எட்டு இலக்க அல்லது பதினாறு இலக்க எண் அல்லது 32 இலக்க எண்களைச் சேகரிக்க முடியும். ஆனால் தசம இலக்கங்கள் இல்லை. பைனரி, இருநிலை இலக்கங்கள்.

பைனரி(Binary) என்றால் என்ன?

பைனரி என்றால் இருநிலை என்று பொருள். binary - இருநிலை.

கணிப்பொறி தன்னுள் செயல்பாடுகள் அனைத்தையும் இரண்டே இரண்டு இலக்கங்களை வைத்துத்தான் செய்கிறது. இதனால் அதன் மின் இணைப்புகளில் சிக்கனங்களும் சௌகரியங்களும் உண்டு.

எந்த எண்ணையும் 0, 1 என்று இரண்டே இரண்டு இலக்கங்களை வைத்துக்கொண்டு எழுத முடியும்.
உதராணத்திற்கு,


0
0
1
1
2
10
3
11
4
100
5
101
6
110
7
111
8
1000

 இதை சற்று கவனித்துப் பார்த்தோமானால் 1, 0 என்ற இரு இலக்கங்களின் அத்தனை சாத்தியக் கூறுகளையும் பயன்படுத்தியுள்ளதை கவனிக்கலாம். தசம வடிவங்களில் குறியீடுகள் அதிகம்.  வரிவடிவங்கள் அதிகம்.  ஆனால் 4 என்று ஒரு தசம இலக்கமாகக் குறிப்பிடுவதற்கு பதில் பைனரி இருநிலை வடிவத்தில் 100 என்று மூன்று இலக்கங்களாக குறிப்பிடபடவேண்டும்.

பைனரியில் 100 என்பதை நூறு என்று வாசிக்கக்கூடாது.  ஒன். ஸீரோ, ஸீரோ என்று இப்படித்தான் வாசிக்க வேண்டும்.

பைனரியில் தசம ஒன்பதுக்கு நேரானது. இந்த முறையில் எண்களைக் குறிப்பிடுவதில் உள்ள மிகப்பெரிய சௌகரியம், மின்சார ரூபத்தில் அந்த எண்களை மாற்றுவது எளிது.

1, 0 என்பதற்கு பதில் விளக்கு எரிகிறது, எரியவில்லை. ஸ்விட் போட்டிருக்கிறது. அணைந்திருக்கிறது.  இப்படி இரண்டு நிலைகளிலேயே எத்தனை பெரிய எண்ணையும் மின்படுத்திவிடலாம்.

இதில் கூட்டல் விதிகள் வழமைக்கு மாறாக இருக்கும்.

1+0 = 1
1+1= 10
1+1= என்பது தசம கூட்டல்.
1+1=10 என்பது பைனரி கூட்டல்.

ஏனெனில் பைனரி உலகில் 10 தான் இரண்டு.!

மற்றொரு கணினி வார்த்தைக்கு வருவோம்..

அகோஸ்டிக் கப்ளர் (Acoustic Coupler) - ஒலிஇணைப்பான் என்று பொருள் கொள்ளலாம்.
Acoustic Coupler
படத்தில் காட்டியுள்ள Acoustic Coupler 1970 களில் பெரும்பாலான பயன்படுத்தப்பட்டன.
 
தொலைபேசிக் (Telephone) கம்பிகள் மூலம் கணினிப் பொறிகளை இணைக்கப்பயன்படும் சாதனம்.  டெலிபோனில் பேசுகிறோம். கணிப்பொறி பேசாது. அது அனுப்பக்கூடிய தகவல்கள் யாவும் இருநிலைத் தகவல்கள் (Binary) இரண்டு இலக்கத் தகவல்கள் 1, 0.

இந்த இரு நிலைச் செய்திகளை கம்பி மூலம் அனுப்புவதில் சில சிரமங்கள் உள்ளன.  அதனால் இரண்டு சுருதிகளாக, இரண்டு தனிப்பட்ட ஒலிகளாக மாற்றி அனுப்புவார்கள்.

உதாரணம்: ச, ப என்ற இரண்டு சுருதி என்றால் '101101010' என்பதற்குப் பதில் 'சபசசபசபசப' என்று அனுப்புவது போல் அதற்கேற்ற மின்சாதனமே இந்த ஒலி இணைப்பான்

கருத்துரையிடுக Disqus

 
Top