வாய்ப்புகள் பெரும்பாலும் தடைகள், தோல்விகள் என்ற உடைகளையே அணிந்து
வருகின்றன. நேற்றைய தோல்விகளின் முன் இன்றைய வெற்றி வாய்ப்புகள் மறைக்கப்
படுகின்றன. இன்று சரித்திரம் படைத்த வெற்றியாளர் அனைவரும், வீழ்ச்சிகளை
வாய்ப்புகளாக மாற்றியவர்கள் தான். சோர்ந்து போவதற்கான காரணங்கள் பல
இருந்தும்.... தன் வீழ்ச்சிகளை வாய்ப்புகளாக மாற்றிய இச்சிறுவனின்
நம்பிக்கைதான்,
|
தன்னம்பிக்கை சிறுவன் |
இச்சிறுவனின் பெயர் கெப் மார்ஷ். அமெரிக்காவின், ஆலபாமா பகுதியை
சேர்ந்தவன். ஒரு கை, இரண்டு கால்கள் பிறப்பிலேயே இல்லாமல் போனதுதான் இவன்
வெற்றியின் அடையாளம். இது அவனை துவளச் செய்யும் அடையாளம் அல்ல...
துணிந்தெழச் செய்த அடையாளம். எண்ணற்ற தடைகளை நம்பிக்கையோடு நீந்திக் கடந்து
பல சாதனைகளை சாத்தியமாக்கிய படங்கள் இங்கே........
|
தன்னம்பிக்கை சிறுவன் |
வாழ்க்கையில் நமக்கு நிகழ்ந்ததும் நிகழவிருப்பதும்
வெறும் 10%தான். அதற்கான நம் வெளிப்பாடு
மட்டுமே 90%
|
தன்னம்பிக்கை |
மனிதர்கள் எப்பொழுதும் அவர்களின் தேவையை மட்டும்தான்
கணக்கில் எடுத்து கொள்கிறார்கள்,
அவர்களின் முழுத்திறனை அல்ல.
|
தன்னம்பிக்கை சிறுவனின் சாதனைகள் |
மகிழ்ச்சியை மாற்றார் தோட்டத்தில் தேடத் தேவையில்லை.
அவை நமக்குள் எரியும் தீ ஜுவாலையிலேயே இருக்கக்கூடும்.
|
தன்னம்பிக்கைச் சிறுவன் - GABE MARSH |
தரையிலிருந்து....
நிலவுக்கு குறி வைப்போம்.
"ஒரு வேளை" தவறினாலும் நட்சத்திரங்களை சென்றடையலாம்.
|
உற்சாகமும் மனோ திடமும் கொண்ட தன்னம்பிக்கையின் முன்னுதாரணம் - GABE MARSH |
வெற்றியாளர்களுக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம்:
|
தனது பயிற்சியாளருடன் - தன்னம்பிக்கைச் சிறுவன் - GABE MARSH |
பலத்தில் பின்தங்குவதல்ல,
அறிவில் பின்தங்குவதல்ல,
பின்னடைவுகளை புறம்தள்ளி முன்னேறுவதில்தான்...!!!
|
மகிழ்ச்சி வெள்ளத்தில் - GABE MARSH |
|
தன்னம்பிக்கை கொண்ட சிறுவன் - GABE MARSH |
|
தன்னம்பிக்கையின் மறுபெயர் - GABE MARSH |
|
அரவணைக்கும் பயிற்சியாளருடன் - GABE MARSH |
|
இங்கே ஒரு உற்சாகம் தன்னம்பிக்கையாக மலர்கிறது.. |
மனம் விரும்பிய செயல்களுக்கு ஆயிரம் வழிகள்.
விருப்பமில்லாமல் விலகிச் செல்ல ஆயிரம் சாக்குகள்.
வெற்றி என்பது நம் விருப்பமா....? வெறுப்பா....?
கருத்துரையிடுக Facebook Disqus