அருணாசலப் பிரதேசம்
அடிப்படைத் தகவல்கள்
| |
தலைநகர்
|
இடாநகர்
|
பரப்பு
| 83,743 ச.கி.மீ. |
மொழி
|
நிஷி, அடி, வாஞ்சோ
|
மக்கள் தொகை
| 10,91,117 |
மக்கள் நெருக்கம்
|
13
|
ஆண் - பெண் விகிதம்
| 54,34% |
லோக்சபை இடங்கள்
|
2
|
ராஜ்ய சபை இடங்கள்
| 1 |
சட்டசபை இடங்கள்
|
60
|
மாவட்டங்கள்
| 16 |
இணையதளம்:
www.arunachalpradesh.in.inமாநில விலங்கு: மிதுன்
மிதுன் - மாநில விலங்கு - அருணாசல பிரதேசம் |
மாநிலப் பறவை: வேலாம்பல்(Great Hornbill)
ஆம்பல் - மாநில பறவை - அருணாசலப் பிரதேசம் |
மாநில பறைவை - அருணாசல பிரதேசம் |
மாநிலப் பூ:
மாநில பூ - அருணாசல பிரதேசம் |
மாநில பூ - அருணாசலப் பிரதேசம் |
அமைவிடம்: மேற்கில் பூடான், வடக்கு மற்றும் வட கிழக்கில் திபெத் மற்றும் சீனா, கிழக்கில் பர்மா தெற்கில் அசாம்.
வரலாறு: அருணாசல பிரதேசத்தின் நவீன வரலாறு 1926, பிப்ரவரி 24-இல் கையெழுத்தான யந்தோவா ஒப்பந்ததின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பிரிட்டீஷ் அரசிலிருந்து துவங்குகிறது. 1962-க்கு முன்னால் இது நார்த் ஈஸ்ட் ஃபிரான்டியர் ஏஜன்சியில் (NEFA) உட்பட்டிருந்தது.
1972 , ஜனவரி 20-இல் இது அருணாசல் பிரதேசம் என்ற பெயரில் மத்திய ஆட்சிப் பகுதியாக மாறியது. 1987 இல் 'ஸ்டேட் ஆப் அருணாசல பிரதேசம்' மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது. (55-ஆம் அரசியல் சட்டத் திருத்தம்)
1987, பிப்ரவரி 20-இல் இந்தியாவின் இருப்பத்தி நான்காம் மாநிலமானது.
பொருளாதாரம்: மக்களின் முக்கிய பொருளாதார மூலதனம் விவசாயமே. மொத்த மக்கள் தொகையில் சுமார் 80% பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சை, லிச்சி, ஆப்பிள், பிளம், பீச். செர்ரி போன்ற பழவகைகள் பெருமளவில் விளைகின்றன. உருளைக்கிழங்கு முக்கியச் சாகுபடிப் பயிர். சுற்றுலா, மரத்தடிகளை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள், கனிமச் சுரங்கங்கள், பழப்பபதினீடு, நெய்தல், கூடை பின்னல் மற்றும் கம்பளத் தயாரிப்பு போன்ற குடிசைத் தொழில்கள்.
முக்கிய விமான நிலையங்கள்: அலோங், தபோரிஜோ, பசிக்காட், தேஜூ, ஸைரோ.
மாவட்டங்கள் - 16: மேற்கு காமெங், கிழக்கு காமெங், கிழக்கு சியாங், கீழ் சுபன்சிரி, சங்லாங், டிபங் பள்ளத்தாக்கு, தவாங், திரப், பாப்பும் பாரே, மேற்கு சியாங், கீழ் டிபாங் பள்ளத்தாக்கு, குருங்மே, அஞ்சால், மேல் சுபன்சிரி, லோஹித், மேல் சியாங்.
முக்கிய இடங்கள்
தவாங்: புத்தத் துறவிகள் மடம், மோண்பா வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் உள்ளனர். இங்குள்ள கோல்டன் நங்கியேல் லாத்ஸே என்னும் புத்தவிகாரமே இந்தியாவில் மிகப் பெரிய புத்தவிகார்.
பரசுராம் குண்ட்: லோஹித் மாவட்டத்தில் உள்ளது. ஜனவரி மாதம் நடைபெறும் பரசுராம மேளா வெகு பிரபலமானது.
பிஸ்மக் நகர்: ஈதுமிஷ்மிஸ் இனத்தவரின் சமய மையம். தீபங்வாலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மாலிநிதான்: புராதான ஆலையங்களின் சிதைவுகள் இங்கே காணப்படுகின்றன.
இடாநகர்: அருணாசலின் தலைநகரம். பாப்பும் பர்ரே மாவட்டத்தில் அமைந்துள்ளது. 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை இங்குள்ளது.
போம்திலா: கடல்மட்டத்திலிருந்து 800 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. கண் கவரும் ஆப்பிள் தோட்டங்கள் மிகுந்தது.
ஆப்பிள் தோட்டம் - அருணாசல பிரதேசம் |
கலாச்சாரம்: பழங்குடி மக்களின் பல்வேறு வகையான நாட்டுப்புற நடன வடிவங்கள் (ரோப்பி, அஜி லாமு, ஹிரி), மூங்கில் மற்றும் பிரம்பு கலைப்பொருட்கள், மண் பாண்டம் செய்தல், கம்பளம் நெய்தல், மர வேலைப்பாடுகள் போன்றவற்றிற்கு பெயர் பெற்றது. கைத்தறி மாநில கலாச்சாரத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.
முக்கிய விழாக்கள்: நோக்கடே இனத்தவரகளின் 'சாலோ லோகூ', மலையின மக்களின் 'புரிபூட்டு' போன்றவை முக்கிய விழாக்கள்.
இருப்பிடமும் சிறப்புகளும்:
- உதய சூரியனின் நாடு எனப்படும் இந்திய மாநிலம்.
- இந்தியாவின் கிழக்கு முனையிலுள்ள மாநிலம்
- இந்திய மாநிலங்களிலேயே மிக அதிகம் மொழிகள் பேசப்படும் மாநிலம்.
- வட கிழக்கு மாநிலங்களில் மிகப் பெரிய மாநிலம்.
- இந்தியாவின் மிகக் குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாநிலம் (ஒரு ச.கி.மீ.க்கு 13 பேர் மட்டுமே உள்ளனர்)
- இந்தியாவின் மிகப் பெரிய புத்த மடாலயமான தவாங் அருணாசலப் பிரதேசத்தில்தான் அமைந்துள்ளது.
- இந்தியாவில் காணப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்க்கிட்களில் 600-க்கும் மேற்பட்ட இனங்கள் அருணாசலில் உள்ளன.
- இதனால் இது 'ஆர்க்கிட்டுகளின் சொர்க்கம்' என சிறப்பிக்கப்படுகிறது.
உங்களுக்காக ஒரு சில ஆர்க்கிட் பூக்கள்..
ஆர்கிட் பூக்கள் |
ஆர்கிட் பூக்கள் |
ஆர்கிட் பூக்கள் |
ஆர்கிட் பூக்கள் |
ஆர்கிட் பூக்கள் |
கருத்துரையிடுக Facebook Disqus