நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மொபைல் போனிலிருந்து கணினிக்கு இணைய இணைப்பு கொடுக்க வேண்டும் எனில், அந்த மொபைல் போனிற்கு ஏற்ற இணைய இணைப்பு மென்பொருளைக் கொண்டு கணினிக்கு இணைய இணைப்பை கொடுப்போம்.
ஆனால் தற்போது புதிய மாற்றங்களுடன், புதிய தொழில்நுட்பத்துடன், பயன்படுத்த எளிமையாக இருக்கும் ஆண்ட்ராய்ட் வகை மொபைல்களிலிருந்து இணைய இணைப்பை ஏற்படுத்த இரண்டு வழிமுறைகள் உள்ளன.
1. wifi வசதி மூலம் கணினிக்கு இணைய இனைப்பை வழங்கு முடியும்.
2 . USB கேபிள் மூலம் இணைய வசதியை கணினிக்கு ஏற்படுத்த முடியும். usb மூலம் கணினிக்கு இணைய இணைப்பை (internet connection) ஏற்படுத்த, எந்த வகையான ஆண்ட்ராய்ட் மொபைல்(model of Android Mobile phone) உங்களிடம் உள்ளதோ அதற்கான யூ.எஸ்.பி. டிரைவரை உங்கள் கணினியில் நிறுவியிருப்பது அவசியம்.
- தேவையான யூ.எஸ்.பி. டிரைவரை (USB Driver) உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்தவுடன் , உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் செட்டிங்ஸ் (settings) செல்லுங்கள்.
- செட்டிங்சை கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் வைர்லெஸ் அண்ட் நெட்வொர்க்ஸ் (wireless & networks)என்பதில் கிளிக் செய்யுங்கள்.
- அடுத்து தோன்றும் விண்டோவில் டிதரிங் & போர்ட்டபிள் ஹாட்பாட் (Tethering & portable hotspot) என்பதை கிளிக் செய்யுங்கள்.
- அடுத்து யூ.எஸ்.பி. தெதரிங் (USB tethering) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்து தோன்றும் விண்டோவில் any ongoing operations such as media transfer, phone software update, backup and restore will be interrupted. என்று காட்டும். அதன் கீழாக அதை உறுதிப்படுத்தும் விதத்தில் OK கிளிக் செய்யுங்கள்.
உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கான USB Driver-களை தரவிறக்கம் செய்துகொள்ள கீழிருக்கும் சுட்டிகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
Acer Android USB Driver
Asus Android USB Driver
Dell Android USB Driver
Google USB Driver
HTC Android USB Driver
Huawei Android USB Driver
Intel Android USB Drivers
Lenovo Android USB Driver
LG Android USB Driver
Motorola Android USB Driver
Samsung Android USB Driver
Sony MobileAndroid USB Driver
Toshiba Android USB Driver
ZTE USB Driver
கருத்துரையிடுக Facebook Disqus