0

பங்குச் சந்தையில் உள்ள சூட்சுமங்கள் (Secret of Share market) பற்றி எழுதவதாக கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு முன்பு பங்கு வணிகத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான கலைச்சொற்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

பங்கு சந்தை (Share Market): 

பங்கு சந்தை என்பற்கு முந்தைய பதிவிலேயே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு முறை நினைவுப்படுத்துகிறேன். விற்பவர்கள், வாங்குபவர்கள் கூடும் இடம். இது physical trading floor அல்லது Virtual Environment ஆக இருக்கலாம்.

Electronic Trading - எலக்ட்ரானிக் டிரேடிங்

Terminal மூலம் வர்த்தகம் செய்யும் முறை. அதாவது VSAT வழியாக ஷேர்மார்ட்கெட் புரோக்கர்களின் அலுவலகங்களை இணைத்து டெர்மினல் மூலம் வர்த்தகம் செய்வது.

Exchanges - இந்தியாவின் பங்கு சந்தைகள் 

இந்திய பங்கு சந்தைகள் முக்கியமானவைகள்.
1. BSE (Bombay Stock Exchange) - மும்பை பங்கு சந்தை
2. NSE (National Stock Exchange) - தேசிய பங்கு சந்தை
மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட Regional Share-market.

குறிப்பு: BSE, NSE பங்கு சந்தைகள் ஏற்கனவே கூறப்பட்டுள்ள VCHAT மூலம் இந்திய நாடு முழுவதும் பங்கு வர்த்தகத்தை வழங்குகிறது.

Index of Sharmarket - பங்கு சந்தையின் குறியீடு. 

  1. Sensex - (BSE -ன் முப்பது பெரிய நிறுவனங்கள் அடங்கிய குறியீடுதான் SENSEX)
  2. Nifty - (NSE - ன் ஐம்பது பெரிய கம்பெனிகள் அடங்கிய குறியீடுதான் NIFTY)
  3. Broker - புரோக்கர்
  4. செக்ஸ்யூரிட்டி அன்ட் எக்ஸ்சேஃஸ் போர்ட் எனப்படும் Securities and Exchange Board of India வின் விதிமுறைகளின்படி BSE - (மும்பை பங்கு வர்த்தகம்) அல்லது NSE (தேசிய பங்கு வர்த்தகம் ) ஆகியவைகளில் பதிவு செய்துகொண்டவர்களைத்தான் புரோக்கர் என்று அழைக்கிறார்கள். இதில் பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே பங்கு சந்தையை இயக்க தகுதி பெற்றவர்கள். 
  5. உதாரணமாக ICICI Securities, mothilal oswal, sharekan, Geogit போன்றவைகளைக் குறிப்பிடலாம். 
பங்கு சந்தையில் எப்படி ஈடுபடுவது? 

பங்கு மார்க்கெட் புரோக்கர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, பங்கு வணிகம் செய்வதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டு இணையதளம் அல்லது தொலைபேசி வாயிலாக பங்கேற்கலாம்.

Contract Note

பங்கு சந்தையில் நீங்கள் பங்குகளை வாங்கியதை, பங்குகள் விற்றதை குறிப்பிடப் பயன்படும் படிவம் இது. இதில் அன்றைய வர்த்தகம் நடைபெற்ற நாள், தேதி, நேரம், விலை, எண்ணிக்கை போன்ற விபரங்களை குறித்து, அவற்றை வர்த்தகம் நடைபெற்ற அன்றை தினம் முடிவடைவதற்குள் (24 மணி நேரத்தில்) கொடுக்கப்பட வேண்டும். இது SEBI என்ற Securities and Exchange Board of India அமைப்பின் விதிமுறை ஆகும்.

Book Closure / Record Date (புக் குளோசர்/ரெக்கார்ட் டேட்)

ஒரு குறிப்பிட்ட தேதியில் பங்கு மார்க்கெட் நிறுவனத்தின் Share யார் யாரிடமெல்லாம் உள்ளது என்பதைத் தீர்மானிக்கும் காரணியாக இருப்பவை புக் குளோசர் / ரெக்கார்ட் டேட்.

பங்கு மார்க்கெட் நிறுவனம் இந்த புக் குளோசர் டேட்டை அவ்வப்பொழுது அறிவிக்கும். அறிவிக்கும் அக்குறிப்பிட்ட தேதியில் divident, Bounus ஷேர் வைத்திருப்பவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.  divident, Bounus வழங்கப்படும் குறிப்பிட்ட அந்நாளை ரெக்கார்ட் டேட் (Record Date) என்பர்.

Non Delivery Period 

நான் டெலிவரி பீடியட் என்பது நிறுவனம் புக் குளோசர் தேதி அறிவித்த நாளிலிருந்து ஷேர்களை வர்த்தகம் செய்ய முடியும். அப்போது நம் கணக்கில் வரவு வைக்க முடியாது. புக் குளோசர் தேதி முடிந்தவுடன்தான் நம் கணக்கிற்கு பணம் வரும்.

Ex-Date 

No Delivery Period - ன் முதல் நாள் எக்ஸ்ட் டேட் எனப்படும். எக்ஸ் டேட்டிற்கு பின் வாங்கப்படும் ஷேர்களுக்கு டிவிடன்ட் , போனஸ் கிடைக்காது.

Bonus - போனஸ்

போனஸ் என்றால் என்ன என்பது நமக்குத் தெரியும். ஒரு நிறுவனம் தனது இலாபத்தில் குறிப்பிட்ட பகுதியை நிறுவன தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது. அதைப்போன்றுதான் பங்கு சந்தையிலும் நிறுவனம் தன்னுடைய ஷேர் வைத்திருப்பவர்களுக்கு லாபத்தை பகிர்ந்தளிக்கும் முறை.

Split - பிரித்தல்

ஸ்பிலிட் என்றால் பிரித்தல். பங்கு முகமதிப்பை (Face Value) குறைத்து பங்குகளை அதிகரிக்கும் முறைக்குப் பெயர் Split. எடுத்துக்காட்டாக உங்களுடைய கணக்கில் 20 ரூபாய் முக மதிப்புடை பங்குகள் 100 இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

அதே பங்குகளின் முக மதிப்பை 10 ரூபாயாக மாற்றி பிரிக்கும்போது உங்களுடைய கணக்கில் 200 பங்குகள் இருக்கும். இப்போது உங்களுடைய பங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். இவ்வாறு பிரிப்பதைத்தான் Split என்பார்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top