0

 
எக்ஸெல் தொகுப்பில் பயன்படுத்தப்படும் சில பங்சன்களுக்கான கட்டளைச் சொற்களும் அவை தரும் தீர்வுகளும் இங்கு தரப்படுகின்றன.
 
1. அன்றைய நாளினை ஒரு செல்லில் பெற today()
 
2. அன்றைய தேதி மற்றும் நேரத்தைப் பெற Date and Time
 
3. கொடுக்கப்படும் மதிப்புகளின் கூட்டுத் தொகையினைப் பெற sum()
 
4. கொடுக்கப்பட்ட மதிப்புகளின் சராசரி மதிப்பினைப் பெற average()
 
5. கொடுக்கப்பட்ட மதிப்புகளில் மிகக் குறைந்த மதிப்பினைப் பெற min()
 
6. கொடுக்கப்பட்ட மதிப்புகளில் மிக அதிகமான மதிப்பினைப் பெற max()
 
7. கொடுக்கப்பட்ட மதிப்புகள் எத்தனை என்று கணக்கிட count()
 
8. காலியாக இல்லாத செல்களின் எண்ணிக்கையைப் பெற counta()
 
9. குறிப்பிட்ட ஒரு நிலையை நிறைவு செய்திடும் செல்கள் எத்தனை என்று அறிய countif()
 
10. குறிப்பிட்ட கண்டிஷன் போட்டு அதனை நிறைவு செய்திடும் மதிப்பினை அறிய if(this,then,else)and() / or()
 
11. ரேண்டம் எண் பெற rand()
 
12. மதிப்பு ஒன்றை அடுத்த முழு இலக்கத்திற்கு அமைக்க round()
 
13. ஒரு எண்ணின் ஸ்குயர் ரூட் எண்ணைப் பெற sqrt()

எக்ஸெல் தொகுப்பில் தகவல்களை பேஸ்ட் செய்திட கண்ட்ரோல்+வி அல்லது பேஸ்ட் பட்டனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஒரு செல்லில் உள்ள தகவல்களை கண்ட்ரோல்+சி கொடுத்து காப்பி செய்திடுங்கள். பின் எந்த செல்லில் அவற்றை பேஸ்ட் செய்திட வேண்டுமோ அந்த செல்லில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஜஸ்ட் என்டர் தட்டுங்கள். ஆஹா! பேஸ்ட் ஆகிவிட்டதா உங்கள் தகவல்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top