வேலைக்கு
செல்பவர்கள், காலை வேளையில் சமைப்பதற்கு நேரம் இல்லாமல் போவதால், பலர்
காலை உணவு சாப்பிடுவதை தவிர்த்துவிடுகின்றனர். எனவே அத்தகையவர்களுக்காக ஒரு
எளிமையான மற்றும் ஆரோக்கியமான முறையில் ஒரு பிரட் டோஸ்ட் செய்யலாம்.
அதுவும் பழங்களில் ஆப்பிள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி மிகவும் ஆரோக்கியமானது என்பதால், அதனை சேர்த்து சூப்பரான முறையில் எப்படி டோஸ்ட் செய்வதென்று பார்ப்போம். முக்கியமாக இதன் சிறப்பு என்னவென்றால், அதற்கு அடுப்பு அதிகம் தேவைப்படாது.
தேவையான பொருட்கள்:
பிரட் - 4 துண்டுகள்
சீஸ் - 2 துண்டுகள்
ஆப்பிள் - 1/2 (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
ஸ்ட்ராபெர்ரி - 4 (நறுக்கியது)
வெள்ளரிக்காய் - 8 துண்டுகள்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரட்டை டோஸ்டரில், பொன்னிறமாக டோஸ்ட் செய்து கொள்ளவும் அல்லது தோசைக்கல்லில் போட்டும் பொன்னிறமாக டோஸ்ட் செய்யலாம்.
அதே நேரம், அனைத்து பழங்களையும் நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சீஸை இரண்டாக நறுக்கி, ஒரு துண்டை பிரட்டின் மேல் வைத்து, பின் அதன் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து, இறுதியில் ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரியை வைத்து, அதன் மேல் தேன் மற்றும் ஆலிவ் ஆயில் ஊற்றி, உப்பு மற்றும் மிளகுத் தூளை சேர்த்து பரிமாறினால், சூப்பரான பழம் மற்றும் சீஸ் டோஸ்ட் ரெடி!!!