1. எந்த போரின் போது மாவீரன் நெப்போலியன் இறந்தார்?
அவர் கடைசியா சண்டை போட்டாரே அந்த போராத்தான் இருக்கணும்.
2. சுதந்திரப் பிரகடனம் எங்கே கையொப்பமிடப் பட்டது?
பேப்பர் மேலதான்.
3. தமிழகத்துக்கு வரும் காவிரி நீரின் நிலை என்ன?
திரவ நிலை.
4. விவாகரத்து நடப்பதற்கான முக்கிய காரணம் என்ன?
கல்யாணம்.
5. பரீட்சைகள் வைப்பது எதற்கு?
பசங்களை பெயிலாக்குவதற்க்கு.
6. எட்டு பொழுதுகள் ஒருத்தர் தூங்காமல் இருப்பது எப்படி?
ரொம்ப சிம்பிள். இரவு முழுதும் தூங்கிட்டு பொழுது விடிஞ்சதும் விழிசுக்கணும்.
7. உங்களின் ஒரு கையில் 4 ஆரஞ்சும், 5 ஆப்பிளும் உள்ளன, இன்னொன்றில் 5 ஆரஞ்சும், 4 ஆப்பிளும் உள்ளன, அப்போ மொத்தத்தில் உங்ககிட்ட என்ன இருக்கும்?
பெரிசா ரெண்டு கை இருக்கும். பொறவு எப்படி இத்தனை பழத்தையும் வச்சிருக்க முடியும்!!
8. ஒரு சுவற்றை கட்டி முடிக்க 8 ஆட்களுக்கு 10 நாட்கள் பிடித்தது. அதே சுவற்றை 4 பேர் கட்டி முடிக்க எத்தனை நாட்கள் பிடிக்கும்?
அதுதான் அந்த எட்டு பேரு ஏற்கனவே கட்டி முடிச்சிட்டாங்களே, அதனால
டைம் எதுவும் தேவைப்படாது.
9. வேக வைக்காத கோழி முட்டையை சிமென்ட் தரை மேல் உடையாமல் போடுவதெப்படி?
தாராளமா போடலாம் சிமென்ட் தரை ஒன்னும் ஆகாது!!
10. ஒரு ஆப்பிளை ரெண்டா கட் பண்ணி அதில் ஒரு பாதியை எடுத்தா அது எது மாதிரி இருக்கும்?
அந்த இன்னொரு பாதி மாதிரியே தான் இருக்கும்.
11. காலையில் எதை சாப்பிட முடியாது?
லஞ்சும், டின்னரும்.