ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, வான் கோழி வளர்ப்பு எல்லாம் போய் இப்போது
காடை வளர்ப்பு பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அதுவும் நம்முடைய
ததமிழ்நாட்டில் காடை வளர்ப்பு மிகப் பிரமாதமாக வளர்ந்துகொண்டிருக்கிறது
என்றால் அது மிகையில்லை.
ஆம் நண்பர்களே..! குறைந்த முதலீடு.. அதிக லாபம் என்ற வகையில் முதலிடம் பிடிப்பது இந்த காடை வளர்ப்புதான்.
பார்ப்பதற்கு சிறிய உருவத்தைப் பெற்றிருந்தாலும், ருசியில் பலமடங்கு பெரியதாக உள்ளது. அதிக சுவையைக் கொண்டுள்ளது காடைக் கறி.
காடை எங்கு வளர்க்கலாம்?
எங்கும் வளர்க்கலாம். பட்டிதொட்டி முதல், பட்டிணம் வரை அனைத்து இடங்களிலும்
வளர்க்க ஏற்ற வகை இது. இறைச்சிக் காடை என்று சொல்லக்கூடிய ஜப்பான் காடை
வளர்ப்பதன் மூலம் மிகக் குறைந்த காலத்தில் அதிக லாபம் பெற முடியும்.
ஜப்பான் காடை:
ஜப்பான் காடை என்று கூறப்படும் இக்காடை வகைகளை வளர்க்க மிகக்குறைந்த இடவசதி
உள்ளவர்கள் கூட வளர்க்க முடியும். மிக்க் குறைந்த மூலதனத்துடன் தொடங்க
முடியும்.
ஜப்பான் காடை வளர்க்க என்ன செய்ய வேண்டும்?
கோழி வளர்ப்பது போன்றதுதான் ஜப்பான் காடை வளர்ப்பதும். கோழி
வளர்ப்புக்குத் தேவையான அளவு தீவனம் தேவைப்படாது. இதற்கு குறைந்த அளவு
தீவனம் இருந்தாலே போதும்.
ஒரு காடை முழுமையாக வளர்ந்து விற்பனைக்கு வர ஆகும் காலம் வெறும் ஆறு
வாரங்களே..! அதாவது ஒன்றரை மாதத்தில் நீங்கள் பணம் பண்ண முடியும். இதற்கு
நீங்கள் காடை வளர்ப்பிற்கான பயிற்சியை பெற்றிருப்பின் கூடுதல் பலன்
கிடைக்கும்.
கோழிகளுக்கு போடும் தடுப்பூசிகள் போன்று, அதிக தடுப்பூசிகளோ, அதிக
பொருட்செலவோ பிடிக்காது. ஒரு காடை தனது விற்பனைக் காலம் வரை எடுக்கும்
தீவனத்தின் அளவு 500 முதல் 550 கிராம் வரை மட்டுமே.. சுருக்கமாக சொன்னால்
அரை கிலோ தீவனத்தை எடுத்துக்கொண்டு, உங்களுக்கு அதைவிட பல மடங்கு இலாபத்தை
குறைந்த நாட்களிலேயே கொடுக்கிறது.
நன்கு வளர்ந்த காடைகள், 150 முதல் 160 கிராம் எடையிருக்கும். இவற்றை
சுத்தப்படுத்தி இறைச்சியாக மாற்றும்பொழுது அதிகபட்சம் 110 கிராம் எடையுள்ள
இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி சுவை அதிகமாக இருப்பதால் பெரியவர்கள்
முதல் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகையாக இருக்கிறது. இதில் 21
சதவிகிதம் புரதம் உள்ளது. குறைந்த அளவே (5கிராம்) கொழுப்புச் சத்து உள்ளது.
காடைகளில் என்னென்ன வகைகள் இருக்கின்றன?
- ஜப்பானிய காடை
- நியூசிலாந்து காடை
- பாப் வெள்ளைக் காடை
- சைனாக் காடை
- மடகாஸ்கர் காடை
- கலிபோர்னியா காடை
- நியூகினியா காடை
- ஜப்பானிய காடை
ஆகிய வகைகள் உள்ளன.
மேலும் காடை வளர்ப்பு குறித்த விபரங்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கித் தெரிந்துகொள்ளவும்..
கருத்துரையிடுக Facebook Disqus