291 (a). பசுத் தோல் போர்த்திய புலி.

291 (b). A wolf in a sheep’s clothing.



292 (a). கணக்குப் பார்த்தல் பிணக்கு வரும்.
292 (b). Ask no questions and you will be told no lies.



293 (a). கேள்விப் பேச்சில் பாதி நிஜம்.
293 (b). Believe not all you see and not half of what you hear.



294 (a). புலிக்கு வாலாவதைவிட எலிக்குத் தலையாவது மேல்.
294 (b). Better to be the head of a dog than the tail of a lion.



295 (a). கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு.
295 (b). Better go to bed without supper than rise in debt!



296 (a). பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரம் ஏற வேண்டும்.
296 (b). If you befriend wolves, you must learn to hunt and howl.



297 (a). ஆழமான நீரும் அமைதியான நாயும் ஆபத்தானவை.
297 (b). Beware of still waters and a silent dog.



298 (a). எலிக்குப் பயந்து வீட்டிக் கொளுத்துவதா?
298 (b). Burn not your house to get rid of mice.



299 (a). குரைக்கும் நாய் கடிக்காது.
299 (b). A threatened blow is seldom given.



300 (a). சோழியன் குடுமி சும்மா ஆடாது.
300 (b). All are not friends that speak us fair.
 
Top