தஞ்சாவூர் மாவட்டம்

தனிச் சிறப்பு மிக்க தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இருப்பிடம்



அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
 தஞ்சாவூர்
பரப்பு
 3,396 .கி.மீ.
மக்கள்தொகை
 22,16,138
ஆண்கள்
 10,96,638
பெண்கள்
 11,19,500
மக்கள் நெருக்கம்
 638
ஆண்-பெண்
 1,021
எழுத்தறிவு விகிதம்
 75.45%
இந்துக்கள்
 19,25,677
கிருத்தவர்கள்
 1,24,945
இஸ்லாமியர்கள்
 1,63,286
புவியியல் அமைவு
அட்சரேகை
 90.50-110.25N
தீர்க்கரேகை
 780.45-70.250E

Thanjavur district map
தஞ்சாவூர் புவியியல் வரைபடம்

இணையதளம்: 
www.thanjavur.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtnj@tn.nic.in
தொலைபேசி: 04362-230102

நிர்வாகப் பிரிவுகள்: 
வருவாய் கோட்டங்கள்-3: தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை

தாலுகாக்கள்: தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி

நகராட்சிகள் -3: கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை

ஊராட்சி ஒன்றியங்கள்: திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், அம்மாப்பேட்டை, வலங்கைமான், திருவையாறு, பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், புதுக்கோட்டை, மதுக்கூர், சேதுபகவசத்திரம், பேராவூரணி.

எல்லைகள்: இதன் வடக்கில் பெரம்பலூர் மாவட்டமும், மேற்கில் திரு,ச்சி, புதுக்கோட்டை மாவட்டமும், தெற்கில் புதுக்கோட்டை  மற்றும் பாக் ஜலசந்தியும், கிழக்கில் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: உள்ளூர் கதைகளின்படி, தஞ்சன் என்னும் அசுரன் ஸ்ரீ ஆனந்த வல்லியம்மன் மற்றும் நீலமேகப்பெருமானால் கொல்லப்பட, பின்பு தஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க இப்பகுதி தஞ்சாவூர் என்று பெயரிடப்பட்டது.

1790களில் தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரமாக இருந்தது.  பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய இது பிற்பாடு நாயக்கர் மற்றும் மராத்தியர்களின் ஆதிக்கத்திற்குட்பட்டது.

1798இல் ஆங்கிலேயர்கள் இதை ஒரு மாவட்டமாக்கினர்.

1991, அக்டோபரில் இம்மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.

1996 இல் இம்மாவட்டத்தின் சில பகுதிகளும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டு, திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

முக்கிய ஆறுகள்: வெண்ணாறு, குடமுருட்டி, பாமினியாறு, அரசலாறு, காவிரி, கொள்ளிடம், கல்லணைக் கால்வாய்.

குறிப்பிடதக்க இடங்கள்: 

பூண்டி மாதா கோயில்: புகழ்பெற்ற கத்தோலிக்கத் தேலாவயம்.

இராஜராஜன் மணி மண்டபம்: தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது கட்டப்பட்டது.  அழகிய பூங்காவுக்குள் அமைந்துள்ளது.

மனோரா நினைவாலயம்: மாவீரன் நெப்போலியன் 1814 இல் ஆங்கிலேயப் படைகளிடம் வீழ்சியுற்றான்.  அதைப் பாராட்டும்விதமாக தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியால் பேராவூரணி கடற்கரையில் கட்டப்பட்டதுதான் எட்டு அடுக்கு கோபுரமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்து இந்நினைவுச் சின்னம்.

குச்சனூர் சனீஸ்வரர் கோயில்: இந்தியாவிலேயே சனி பகவானுக்கான தனிக்கோயில் இது ஒன்றே.

சரபோஸ்வரர் ஆலயம்: மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலை வழிபட்டால் பில்லி, சூனியம் அகலும் என்பது நம்பிக்கை.  திருப்புவனத்தில் உள்ளது.

முக்கிய விழாக்கள்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜனின் நினைவைப் போற்றும் வகையில் ஜனவரி மாதம் எட்டு நாட்கள் இசைத்திருவிழா நடைபெறுகிறது.  பன்னிரெண்டு ஆண்டக்கொரு முறை நடைபெறும் கும்பகோணம் மகாம்சம்.Thanjavur

இருப்பிடமும், சிறப்புகளும்: 

சென்னையிலிருந்து 334 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.
பிற்காச் சோழர்களின் தலைநகரம்

தமிழகத்தின் 'நெற்களஞ்சியம்'.

பரத நாட்டியக்கலை பிறந்த இடமாகக் கருதப்படுகிறது.

கலைக்கும், இலக்கியத்திற்கும், கைவினைப் பொருட்களுக்கும் புகழ்பெற்ற நகரம்.

பட்டு நெசவுக்குப் பெயர் பெற்ற தாராசுரம்.

சரஸ்வதி மஹால் நூலகம், இந்தியாவில் கீழை நாட்டு ஆவணங்களின் மூலப்படிகளை பாதுகாக்கும் முக்கிய நூலகம்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை இங்குள்ளது.

குறிப்பிடத்தக்கோர்: சைவ அடியார்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர், கம்பர், ஔவையார், இராஜா ராஜ சோழன் தஞ்சாவூரோடு தொடர்பு பெறுகின்றனர்.  பொன்னையா பிள்ளை சகோதரர்கள் (பாரதநாட்டியக் கலைஞர்கள்) , நவாப் இராஜ மாணிக்கம்பிள்ளை (நாடக நடிகர்), சீர்காழி கோவிந்தராஜன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
 
Top