311 (a). ஆபத்துக்குப் பாவம் இல்லை.
311 (b). Any port in a storm.
312 (a). சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை.
312 (b). As the call, so the echo.
313 (a). ஏழை சொல் அம்பலம் ஏறாது.
313 (b). As well be hanged for a sheep as for a lamb.
314 (a). கடலில் மூழ்குபவரைவிடக் கள்ளில் மூழ்குபவர் அதிகம்.
314 (b). Bacchus has drowned more people than Neptune.
315 (a). வாக்குக் கொடுக்காதே! கொடுத்தால் நிறைவேற்று!
315 (b ). Be slow to promise but quick to perform.
316 (a). நிறையக் கேள்; குறைவாகப் பேசு!
316 (b). Be swift to hear and slow to speak.
317 (a). கன்னியின் அழகு காண்பவர் கண்களில்.
317 (b). Beauty lies in the lover’s eyes.
318 (a). அடிமை வாழ்வினும் வீர மரணமே மேல்.
318 (b). Better a glorious death than a shameful life.
319 (a). நெருப்பும் அரசனும் நெருங்காதவரை நண்பர்கள்!
319 (b). Better a little fire to warm us than a great fire to burn us.
320 (a). நாளைக்குக் கிடைக்கும் பலாக்காயைவிட இன்றைக்குக் கிடைக்கும் களாக்காயே மேல்!
320 (b). Better an egg today than a hen tomorrow.