சேலம் மாவட்டம்

மேட்டூர் அணை தென்னிந்தியாவின் மிகப் பெரிய அணைக்கட்டுக்களில் ஒன்று

அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
 சேலம்
பரப்பு
 5,205 .கி.மீ
மக்கள் தொகை
 30,16346
ஆண்கள்
 15,63,633
பெண்கள்
 14,52,713
மக்கள் நெருக்கம்
 575
ஆண்-பெண்
 929
எழுத்தறிவு விகிதம்
 65,09%
இந்துக்கள்
 28,83,908
கிருத்தவர்கள்
 50,450
இஸ்லாமியர்
 77,648


புவியியல் அமைவு


அட்சரேகை
 110.14-120.53 N
தீர்க்க ரேகை
 770.44-780.50E



இணையதளம்: 

www.salem.tn.inc.in

ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrslm@tn.nic.in
தொலைபேசி: 0427-2330030

எல்லைகள்: இதன ்மேற்கில் தருப்புரி மாவட்டமும், கிழக்கில் விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்ளும், தெற்கில் திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களும் மேற்கில் ஈரோடு மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும், சுல்தானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் திப்பு சுல்தானியரிடமிருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு "பாரமஹால் மற்றும் சேலம்" மாவட்டம் 1792 உருவாக்கப்பட்டது.  தரம்புரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட பாரமஹால் மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள் இதில் அடங்கியிருந்தன.
சில ஆண்டுகளுக்கு பிறகு இது கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பாரமஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராககக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.  1801 இல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.

பின்னர் 1808 இல் இ.ஆர்.ஹார் கிரேவ் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தபோது இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  1830-இல் மாவட்டத் தலைநகர் தரும்புரியில் இருந்து சேலத்திற்கு மாற்றப்பட்டது.  தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஒசூருக்கு மாற்றப்பட்டாலும் கூட, 1860 இல் ஆட்சிதலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கே மாற்றபட்டது.

1965-இல் சேலத்தில் இருந்து சேரவராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கபட்டு, தரம்புரி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.  1996, மே மாதம் சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் உருவானது.

முக்கிய ஆறுகள்: காவிரி, மணிமுத்தாறு, விசிஷ்ட நதி

குறிப்பிடத்தக்க இடங்கள்: 

சங்ககிரி கோட்டை: சங்ககிரி மலையில் அமைந்துள்ள இக்கோட்டைக்குள் ஆறு நடைபாதைகள், ஐந்து கோயில்கள், இரண்டு மசூதிகள் மட்டுமல்லாமல், திப்புசுல்தானும் தீரன் சின்னமலையும் பயன்படுத்திய போர் ஆயுதங்களும் உள்ளன.

பொய்மான் கரடு: தரைப்பகுதியில் கிழக்குப் பக்கம், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த்தால், பாறைகளுக்கு நடுவே கொம்புகளுடன் ஒரு மான் நிற்பது போல் தோன்றுவதால் இதற்கு பொய்மான் கரடு எனப் பெயர் வந்தது.  இது நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலையில் உள்ளது.

ஜமா மசூதி: மைசூரை ஆண்ட மன்னர் திப்புசுல்தானால் கட்டபட்ட பழம்பெரும் மசூதி, மணிமுத்தாறின் தென்கரையில் அமைந்துள்ளது.

இருப்பிடமும், சிறப்புகளும்:


இருப்பிடமும், சிறப்புகளும்:

சென்னையிலிருந்து 334கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

வடக்கே நாகர் மலை, தெற்கே ஜீரகமலை மேற்கே காஞ்சன மலை, கிழக்கே கொடுமலை என நான நாற்புறமும் மலை சூழ்ந்த எழில் நகரம்

சேலத்தில் விமானநிலையம் உள்ளது.

மாம்பழமும், பச்சரிசியும் இந்த நகரின் சிறப்பை பறைசாற்றுகின்றன.

குருவம்பட்டி உயிரியல் பூங்கா.

இந்தியாவிலேயே அதிகம் மாக்னசைட் உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஒன்று.

ஜவ்வரிசி மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலம் உருக்காலை, வெள்ளிக்கொலுசு போன்றவற்றிற்கு புகழ் பெற்றது.

ஏழைகளின் ஊட்டி 'ஏற்காடு'

இரும்புத் தாது, பாக்சைட், சுணாம்புக் கல், அலுமினியத் தாது போன்ற கனிம வளங்களைக் கொண்டுள்ளது.

சேலம் சில்வர் பாத்திரங்கள் புகழ் பெற்றது.

குறிப்பிடத்தக்கோர்டாக். சுப்பராயன், மோகன் குமாரமங்கலம், மாம்பழக் கவியராயர், டாக். குருபாதம், எஸ்.பி.ராமசாமி
 
Top