சமீப
காலமாக தினசரிகளில் இத்தகைய புது திருடர்கள் குறித்து செய்திகளை நிறைய
வாசிக்க முடிகிறது. அது "தாங்கள் பணி செய்யும் இடங்களிலேயே திருடுவது". நகை
கடைகளில், அடகு கடைகளில் பணிபவர்கள் - தங்கள் உறவினர்கள் வீடுகளில்,
அவர்களே திருடர்களை ஏற்பாடு செய்து கொள்ளை போக காரணமாக இருந்துவிட்டு
நடிப்பது. இத்தகைய செயல்கள் படித்தவர், படிக்காதவர் என்று சகல
மட்டத்திலும் உள்ளது. கள்ளக்காதலை போல இத்தகைய செய்திகளும் இன்றைக்கு
அதிகம் காணக்கிடைக்கிறது.
சமீபத்தில் வந்த சில படங்களும், (வத்திக்குச்சி, சூதுகவ்வும்) "புத்திசாலித்தனமாக தப்பு செய்தால் மாட்டிக் கொள்ள மாட்டோம். வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம்" என்று போதித்துள்ளது. படத்தின் இறுதி காட்சிகளில் தப்பு செய்தவன் மாட்டி கொள்வதை போலவே நிஜத்திலும் திருடர்கள் மாட்டி கொள்ளவே செய்கிறார்கள். மனிதர்களுக்கு ஏன் புத்தி இப்படி போகிறது. ஒழுங்காக வேலை பார்த்து கொண்டிருப்பவருக்கு என்ன நேர்ந்தது. சுலபமாக பணக்காரனாக வேண்டும் என்கிற சிந்தனை தான்.
கூடாத சேர்க்கையும் இத்தகைய சிக்கல்களில் மாட்டிவிட்டுவிடுகிறது. எல்லாமே ஜாலியாக இன்றைக்கு பார்க்கப்படுகிறது. கல்லூரியில் படிக்கிற மாணவர்கள் சிலர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட செய்திகளையும் அவ்வப்போது வாசிக்க முடிகிறது. "உல்லாசமாக இருக்கவாம்". பிடிபட்ட பின் ஏது உல்லாசம். கொள்ளையடிக்க ஆட்களை ஏற்பாடு செய்து, தன்னையும் காயப்படுத்தி கொண்டு திருட்டு நாடகம் நடத்திய ஒருவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர் என்கிற செய்தியை வாசித்ததன் விளைவு - இந்த பதிவு.
"உழைப்பின் மூலமே வளர்ச்சியை எட்ட வேண்டுமே ஒழிய திருட்டின் மூலமல்ல" என்பதை காலதாமதமாக உணருவதால் பயனொன்றும் இல்லை. தினமலர் இணையத்தில் வாசித்த கொள்ளை நாடக சம்பவம் இதோ. "நகை அடகு கடை ஒன்றில், கடந்த, இருபதாம் தேதி, கொள்ளை நடந்தது. பகல், பணிரெண்டு மணிக்கு, மேலாளரை கட்டிப்போட்டு விட்டு, இருவர் கொள்ளை அடித்ததாக சொல்லப்பட்டது. போலீஸின் தீவிர விசாரணையில், இந்த கொள்ளை சம்பவமே நாடகம் என, கண்டுபிடிக்கப்பட்டது.
ஆசை மட்டுமல்ல பணத்தாசையும் வெட்கமறியாது. "இந்த கொள்ளை சம்பவ நாடகத்தை அரங்கேற்ற, ஒரு மாதமாக, ஒத்திகை நடத்தி வந்துள்ளார்களாம். ஆனால் பிடிபடுவதற்கு எந்த ஒத்திகையும் தேவைபடவில்லை. இந்த நாடகத்தில் நடித்த இரண்டு கொள்ளையர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். மேலாளர் கொடுத்த தகவல் படி, வழக்கறிஞர் உட்பட மூவரிடமும், போலீசார், விசாரிக்கின்றனர். "3.75 கிலோ நகைகளும் மீட்கப்பட்டன" கொள்ளை நாடகமும், முடிவுக்கு வந்துள்ளது. போலீஸார் எப்படி கண்டுபிடித்தார்கள்.
கடையில், கண்காணிப்பு கேமரா இருந்தபோதிலும், காட்சி பதிவு கருவியை, கொள்ளையர்கள் எடுத்து சென்றதாக, புகாரில் தெரிவிக்கப்பட்டது. ஊழியர் ஒத்துழைப்பின்றி, இது நடக்க வாய்ப்பில்லை என, போலீசார், சந்தேகித்தனர். கடை மேலாளர் கையில், கொள்ளையர்கள் வெட்டியதாகவும் கூறப்பட்டது. ஆனால், அவர் தெம்பாகவே இருந்தார். இதுவும் சந்தேகத்தை. வலுப்படுத்தியது. இதை வைத்துதான், இந்த சம்பவம், நாடகம் என்பதை போலீசார் உறுதி செய்தனர்"
பல நாள் திருடன் மட்டுமல்ல ஒரு நாள் திருடனும் அகப்பட்டே தீருவான். நஞ்சு கருத்தினை காட்டும் திரைக்காட்சிகளை திரையரங்கை விட்டு வெளியே வரும்போதே மறந்து விடுவது நல்லது. பாலியல் குற்றம் குறித்த பதிவில் எழுதி இருந்தேன். தம் பிள்ளைகள் யாரோடெல்லாம் பழகுகிறார்கள் என்று பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று. இத்தகைய கொள்ளை குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் திருமணமானவர்களாக இருப்பதால், தம் கணவர்களின் நட்பு வட்டத்தை மனைவிமார்கள் தெரிந்து கொள்வது நல்லது.

விரல்
ரேகை நிபுணர்கள் ஆய்வில், மேலாளரின் விரல் ரேகைகள் மட்டுமே கிடைத்தன. பிற
ரேகைகள் பதிவாகவில்லை.
தொடர் விசாரனைக்கு பிறகு, "வழக்கறிஞர் ஒருவரின் யோசனைப்படி, கொள்ளை நாடகம்
நடத்தப்பட்டதாக, தெரியவந்ததாம்." வழக்கறிஞர் அவரது தொழிலை ஒழுங்காக
கவனித்து கொண்டிருக்கலாம். கடை மேலாளருக்கு புத்தி எங்கே போயிற்று. சொற்ப
வருமானம் என்றாலும் கௌரவமாக வாழ்ந்திருக்கலாம். இப்போது குற்றவாளியாக.
ஆசை மட்டுமல்ல பணத்தாசையும் வெட்கமறியாது. "இந்த கொள்ளை சம்பவ நாடகத்தை அரங்கேற்ற, ஒரு மாதமாக, ஒத்திகை நடத்தி வந்துள்ளார்களாம். ஆனால் பிடிபடுவதற்கு எந்த ஒத்திகையும் தேவைபடவில்லை. இந்த நாடகத்தில் நடித்த இரண்டு கொள்ளையர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். மேலாளர் கொடுத்த தகவல் படி, வழக்கறிஞர் உட்பட மூவரிடமும், போலீசார், விசாரிக்கின்றனர். "3.75 கிலோ நகைகளும் மீட்கப்பட்டன" கொள்ளை நாடகமும், முடிவுக்கு வந்துள்ளது. போலீஸார் எப்படி கண்டுபிடித்தார்கள்.
கடையில், கண்காணிப்பு கேமரா இருந்தபோதிலும், காட்சி பதிவு கருவியை, கொள்ளையர்கள் எடுத்து சென்றதாக, புகாரில் தெரிவிக்கப்பட்டது. ஊழியர் ஒத்துழைப்பின்றி, இது நடக்க வாய்ப்பில்லை என, போலீசார், சந்தேகித்தனர். கடை மேலாளர் கையில், கொள்ளையர்கள் வெட்டியதாகவும் கூறப்பட்டது. ஆனால், அவர் தெம்பாகவே இருந்தார். இதுவும் சந்தேகத்தை. வலுப்படுத்தியது. இதை வைத்துதான், இந்த சம்பவம், நாடகம் என்பதை போலீசார் உறுதி செய்தனர்"
பல நாள் திருடன் மட்டுமல்ல ஒரு நாள் திருடனும் அகப்பட்டே தீருவான். நஞ்சு கருத்தினை காட்டும் திரைக்காட்சிகளை திரையரங்கை விட்டு வெளியே வரும்போதே மறந்து விடுவது நல்லது. பாலியல் குற்றம் குறித்த பதிவில் எழுதி இருந்தேன். தம் பிள்ளைகள் யாரோடெல்லாம் பழகுகிறார்கள் என்று பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று. இத்தகைய கொள்ளை குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் திருமணமானவர்களாக இருப்பதால், தம் கணவர்களின் நட்பு வட்டத்தை மனைவிமார்கள் தெரிந்து கொள்வது நல்லது.
"பிடிபடமாட்டோம்"
என்கிற நப்பாசையில் தான் எல்லா குற்றங்களும் நடக்கின்றன. "நம்மை திசை
திருப்பக்கூடிய சூழலில் தான் வாழ்கிறோம். நம்மை காத்து கொள்ள வேண்டிய
அவசியமுள்ளது" நம்மை நாம் காத்து கொள்ள, கட்டுப்படுத்தி கொள்ள தவறும்போது
தான் பல அனர்த்தங்கள் நிகழ்கிறது.