அரசு அலுவலகங்களில் கணினி
தெரிந்தவர்களுக்கு தனி மரியாதை உண்டு. அதுவும் EXCEL தெரிந்தவர்களுக்கு
கூடுதல் மதிப்பு உண்டு. மைக்ரோசாப்ட் வோர்டை எளிதில் கையாள்பவர்கள் கூட
எக்செல்லை கண்டு அஞ்சுகிறார்கள். பல்வேறு விவரங்களின் தொகுப்புகள்,
கணக்கீடுகள்,அறிக்கைகள் தயாரிப்பதற்கு எக்செல் உதவுகிறது என்பது அனைவரும்
அறிந்ததே. மேலதிகாரியிடம் நம்மை கொஞ்சம் அறிவாளியாகக் காட்டிக் கொள்ள
எக்செல் பயன்படும். எனக்குத் தெரிந்து எக்செல்லில் உள்ள அனைத்து
பயன்பாடுகளையும் அறிந்து பயன்படுத்தியவர் மிகக் குறைவாகவே இருப்பார்கள்.
எத்தகைய கணக்கீட்டையும் செய்ய வல்லது எக்செல் என்று கூறுவர். அதில்
கொஞ்சமாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்.
தேவை இருக்கும்போதுதானே தேடுதல் தொடங்குகிறது? நிறைய தடவை
எக்செல்லில் பல்வேறு அட்டவணைகள் தயாரிக்கும்போது எண்களை எழுத்துகளாக மாற்ற
வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஒவ்வொரு முறையும் எழுத்தால் எழுதுவது போல டைப் செய்ய வேண்டி இருந்தது. இதற்கு ஏதேனும் எக்செல்லில் பங்க்ஷன் இருக்கிறதா என்று தேடித் பார்த்தேன் எனக்கு கிடைக்கவில்லை..யாரிடமும் தக்க பதிலும் கிடைக்க வில்லை. இணையத்தில் தேடியபோது எக்செல்லில் இதற்கான நேரடியான வழி இல்லை என்று தெரிய வந்தது.
மைக்ரோசாப்ட் ஆபீஸின் எக்சல் என்னும் பிரம்மாண்டத்தில் எண்களை ஆங்கிலத்தில்கூட எழுத்துக்களாக மாற்றும் வசதி இல்லை என்ற போது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆனால் அமெரிக்க கரன்சியை எழுத்துக்களாக மாற்றும் நிரலை மைக்ரோசாப்ட் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதை எக்செல்லில் இணைத்துக் கொண்டால் எண்பெயர்களை எளிதில் மாற்ற முடியும். விசுவல் பேசிக் ஜாவா ஸ்க்ரிப்ட் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பதால் மாற்று வழி தேடினேன்.
நமது தேவை இந்திய ரூபாயை எழுத்துக்களாக மற்றும் வசதிதானே இன்னும் தேடிய போது இதற்கான சில add inகள் கிடைத்தது.

அவற்றில் ஒன்று
கஸ்டம்ஸில் பணிபுரியும் சென்னையை சேர்ந்த சுரேஷ் என்பவர் எண்
வடிவில் இருக்கும் ரூபாயை எழுத்தாக மாற்றக் கூடிய இந்த ADDIN ஐ உருவாக்கி
இருக்கிறார். (அவர் மென்பொருளாளர் அல்ல என்றபோதும் கணினி பற்றி பல
விஷயங்களை DIGITAL QUEST என்ற வலைப் பக்கத்தில் எழுதியுள்ளார்).
இதை நிறுவ முதலில் கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்து கோப்பை பதிவிறக்கம் செய்யவும்.
SureshAddin.xla பதிவிறக்கம்
DIGITAL QUEST என்ற வலைப பக்கத்துக்கும் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://www.dq.winsila.com/
1.பின்னர் ஒரு EXCEL 2007 ஐ திறந்து கொள்ளவும். இடது மூலையில் உள்ள OFFICE BUTTON ஐ கிளிக் செய்யவும் அதில் Excel Options க்கு செல்லவும்
2.Excel Option விண்டோவில் add ins மற்றும் Go கிளிக் செய்க
3. அடுத்த விண்டோவில் Browse ஐ கிளிக்
செய்த ஏற்கனவே ல்வுன்லோது செய்த ஃபைல் இருக்கும் இடத்திற்கு சென்று
கீழுள்ள படத்தில் உள்ளவாறு SureshAddin.xla கோப்பை தேர்வு செய்து ஒ.கே ஒ.கே
கொடுக்கவும்
இப்பொழுது எண்களில் உள்ள ரூபாய் மதிப்பை எழுத்து வடிவில் மாற்றும் வசதி நிறுவப்பட்டு விடும்.
add in களின் பட்டியலில் இதுவும் சேர்ந்து விடும்
add in களின் பட்டியலில் இதுவும் சேர்ந்து விடும்
ஒரு எக்செல் ஃபைலை திறந்து ஏதாவது
ஒரு செல்லில் ஏதாவது ஒரு எண்ணை டைப் செய்யவும் எடுத்துக்காட்டாக A1
செல்லில் 15452.60 என்று உள்ளீடு செய்வதாகக் கொள்வோம்
அதற்கு கீழே உள்ள செல்லில் அதாவது A2 வில் கீழ்க்கண்டFORUMULA ஐ டைப் செய்தால்
=rswords(A1)
இப்போது Rupees Fifteen Thousand Four Hundred Fifty Two And Paise Sixty Only
என்று மாறுவதை காணலாம்
A2 செல்லில் உள்ளீடு செய்த Formula சிவப்பு வட்டமிட்ட FORUMULA BAR லும் தெரிவதை பார்க்கலாம்.
A1 என்ற செல் Referense க்கு பதிலாக எண்ணையும் நேரடியாக குறிப்பிடலாம்
உதாரணத்திற்கு =rswords(98765.50) என்று டைப் செய்தால்
Rupees Ninety Eight Thousand Seven Hundred Sixty five and Paise Fifty Only என்று வந்து விடும்.
இதன் மூலம் 100 கோடி வரை எழுத்துருவிற்கு மாற்ற முடியும்
வேறுசில Add in களும் உண்டு .
பயனுள்ளதாக இருந்ததா? உங்களில் ஒரு சிலருக்கேனும் உதவக் கூடும் என்று நம்புகிறேன்.