How Transfer Ppf Account From Post Office To Sbi Bank
உங்களுடைய பப்ளிக் ப்ராவிடன்ட் ஃபண்ட் (பிபிஎஃப்) கணக்கை அஞ்சலகத்தில் வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பிபிஃஎப் கணக்கில் ஒவ்வொரு முறையும் பணம் செலுத்தும் போது நீங்கள் அஞ்சலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும். அங்கு நீங்கள் காத்திருக்க வேண்டும். அதனால் உங்களுக்கு நேரம் விரயமாகிறது.

இதனைத் தவிர்க்க உங்கள் பிபிஎஃப் கணக்கை அஞ்சலகத்திலிருந்து எஸ்பிஐ வங்கிக்கு மாற்றலாம். அவ்வாறு மாற்றுவது மிகவும் எளிதானது. நீங்கள் உங்கள் பிபிஎஃப் கணக்கை எஸ்பிஐ வங்கி மற்றும் அதன் உதவி பெறும் வங்கிகளுக்கு மாற்றினாலும் அல்லது ஐசிஐசிஐ வங்கிக்கு மாற்றினாலும் கீழ்கண்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

பிபிஃஎப் கணக்கை அஞ்சலகத்திலிருந்து எஸ்பிஐ வங்கிக்கு மாற்றுவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

1. எஸ்பிஐ வங்கியில் ஒரு வங்கிக் கணக்கு வைத்திருப்பது எப்போதுமே நல்லது

2. உங்கள் வங்கி பாஸ் புத்தகத்தை இன்று வரை அப்டேட் செய்ய வேண்டும். அதை நகல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

3. உங்கள் பிபிஎஃப் கணக்கை எஸ்பிஐ வங்கிக்கு மாற்றும் போது உங்களுடைய நாமினியையும் மாற்றிக் கொள்ளலாம்.
எஸ்பிஐ வங்கிக்கு மாற்றுவதற்கு செய்ய வேண்டியவை

1. அஞ்சலகத்திலிருந்து பிபிஎஃப் கணக்கை எஸ்பிஐ வங்கிக்கு மாற்றுகிறீர்கள் என்றால், ஆன்லையினில் சென்று எஸ்பி 10 என்ற மாற்றுவதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

2. அந்த படிவத்தைப் பூர்த்தி செய்து, எஸ்பிஐ வங்கிக்கு உங்கள் பிபிஎஃப் கணக்கை மாற்ற வேண்டி விண்ணப்பிக்க வேண்டும்.

3. பூர்த்தி செய்தவுடன், உங்கள் வங்கி பாஸ் புத்தகத்தையும் சேர்த்து விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

நீங்கள் சமர்ப்பித்தவுடன், உங்களுடை விண்ணப்பம் சம்பந்தப்பட்ட வங்கிக்கு, கொடுத்திருக்கும் சான்றிதழ், மற்றும் கணக்கில் இருக்கும் மீதி பணத்திற்கான டிமான்ட் ட்ராப்ட் மற்றும் செக்கோடு சென்றுவிடும். அதன் பின் சம்பந்தப்பட்ட வங்கியிருந்து உங்களுக்கு அழைப்பு வரும்.

பின் உங்களுக்கு ஒரு புதிய வங்கிப் பாஸ் புத்தகம் வழங்கப்படும். ஆனால் இந்த புதிய வங்கிப் பாஸ் புத்தகத்தில் உங்களுடைய பழைய அஞ்சலக நடவடிக்கைகள் இருக்காது.
 
Top