குடையைக் கண்டுபிடித்தவர் ஜான்ஹா வேஸ் என்பவர் ஆவர்.


பாம்பு மிசார் என்ற ஒரு வித பசையின் மூலம் வாசத்தை அறியும் தன்மையுடையது.


இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மான் இனம் திகாம்பர் என்ற இனம் ஆகும்.


சமுதாயப் பொதுபணிச் சேவைக்கு அளிக்கப்படும் விருதான ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற விருதைப் பெற்ற முதல் இருவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அன்னை தெரசா ஆவர்.


பிரமிடுகளுக்குப் பிரசித்திப் பெற்ற எகிப்து குண்டூசியை முதலில் கண்டுபிடித்த பெருமையும் பெறுகிறது.


மனித உடலில் வேலையில்லாத உறுப்பு குடல்வால்.


உயிர்காக்கும் உலோகம் ரேடியம்.


தமிழ்நாட்டில் கடல் மட்டத்தை விட மிக உயரத்தில் உள்ள ஏரி உதகமண்டல ஏரியாகும்.


பத்திரிக்கைகளே இல்லாத நாடு காம்பியா.


எந்த எண்ணாலும் மீதியின்றி வகுக்க முடியாத எண் 37.


பாட்டாலஜி எனும் துறை, முழுக்க முழுக்க முட் செடிகள் மட்டுமே ஆராயும் துறையாகும்.


கன்னியாகுமரி 1956-ம் ஆண்டு தான் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.


உலகிலேயே முதன் முதலில் சாலை அமைத்தவர்கள் ரோமானியர்கள் தான்.


இந்திய எல்லைக்கு உட்பட்டு மொத்தம் ஆயிரத்து இருநூறு தீவுகள் உள்ளன.


பூமியில் வாழும் மிருகங்களிலேயே பெரியது கடலில் வாழும் ப்ளூவேல் என்ற நீலத் திமிங்கலம் தான்.


காசினி எனும் விண்கலம் 1966-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.


முதன் முதலில் முத்து கி.மு.12ம் நூற்றாண்டில் சீனக் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.


முதன் முதலில் பவழம் கி.பி.3ம் நூற்றாண்டில் கிரீஸ் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.


முதன் முதலில் உப்பு சீனக் கடலில் கி.மு.2200ம் ஆண்டு எடுக்கப்பட்டது.
 
எட்வர்ட் எலியட்ஸ் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியின் போது சென்னையில் நீதிபதியாக இருந்தவர். அவருடைய பெயர்தான் எலியட்ஸ் சாலைக்கு சூட்டப்பட்டது.


உஸ்மான் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியில் கவர்னரின் ஆலோசகராக இருந்தவர். அவருடைய பெயர்தான் உஸ்மான் சாலை எனப் பெயர் பெற்றது.


ஹென்றி சேமியர்ஸ் என்பவர் கெட்ராஸ் கிளப்பை நிறுவினார். எனவே தான், அடையாற்றின் கரையில் இருக்கும் இந்தக் கிளப்பை நோக்கிச் செல்லும் சாலைக்கு சேமியர்ஸ் சாலை எனப் பெயர் பெற்றது.


பாந்தியன் என்ற பெயரில் ஒரு தேவாலயம் எழும்பூரில் உள்ளது. அதனால் தான் அங்கு சாலைக்கு பாந்தியன் சாலை என பெயர் சூட்டப்பட்டது.


நிறமாலையைக் காண ஸ்பெக்ட் ராஸ்கோப் எனும் கருவி பயன்படுகிறது.


மேகங்களின் திசை, உயரம் ஆகியவை அறியப் பயன்படும் கருவி நீபோஸ்கோப்.


புதுவகையான டிசைன்களை உருவாக்கப் பயன்படும் கருவி கலைடாஸ்கோப்.


மிகக் குறைந்த வெப்ப நிலையை அளவிட பயன்படும் கருவி கிரையாஸ்கோப்.


அச்சிட்ட படங்களைத் திரையில் விழச் செய்ய உதவும் கருவி எபிடாஸ்கோப்.


இராபர்ட் டி நொயிலி என்ற இத்தாலியர் 1605- இல் தமிழகம் வந்தார். தமிழ் மேல் கொண்ட பற்றினால் தமது பெயரை 'தத்துவ போதக சுவாமிகள்' என்று மாற்றிக் கொண்டார்.


வீரமா முனிவரின் இயற்பெயர் கொன்ஸ்டான்ஸ் ஜோசப் பெஷி என்பதாகும். கொன்ஸ்டான்ஸ் என்றால் தைரியம் என்று பொருள். இவர் தமது பெயரை 'தைரியநாத சுவாமி' எனச் சிறப்பாக வைத்துக்கொண்டார். அதுவே நாளடைவில் 'வீரமாமுனிவர்' ஆனது.


டாக்டர்.ஜி.யு. போப் 'தமிழ் மாணவன்' என்றே அழைக்கப் பட்டார்.


கிறிஸ்தவக் கம்பர் எனப்பட்டவர் எச். ஏ. கிருஷ்ணப்பிள்ளை ஆவார். இவர் இரட்சண்ய யாத்திரிகத்தை எழுதினார்.


தமிழ் நாவலின் தந்தை எனப்படுபவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆவார்.


ஆண்டுதோறும் நவம்பர் 10ம் தேதி போக்குவரத்து தினம் கொண்டாடப்படுகிறது.


பத்திரிமையாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடு இராக்.


சுமோ என்று அழைக்கப்படும் மல்யுத்த விளையாட்டு தோன்றிய நாடு ஜப்பான்.


புனித நகரமான மெக்கா சவுதி அரேபியாவில் உள்ளது.


இந்தியாவிலும் வங்க தேசத்திலும் கங்கை நதி ஓடுகிறது.


அமேரிக்காவில் கென்சிங்டன் நகரில் தோன்றிய சக்தி வாய்ந்த மின்னல் தரையிறங்கியது. அவ்விடத்தில் ஓர் அடி அகலமும், 30அடி ஆழமும் கொண்ட பள்ளம் ஏற்பட்டது. அதிலிருந்து நீ ஊற்றெடுத்து ஓடியது.


உலகில் அதிக நாள் உயிர் வாழும் உயிரினமாகத் திகழ்வது ஆமைகள். 300ஆண்டுகளுக்கு மேல் வாழும் ஆமைகள் உள்ளன.


கடல் எனப் பெயர் பெற்ற ஏரிகள் காஸ்பியன் கடல், சாக்கடல், ஆரல்கடல் முதலியனவாகும்.


பாரதத்தின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்.


காசநோய் நுரையீரலைத் தாக்கும்.


உலகில் மிகப் பெரிய மியூசிக்கல் சேர் போட்டி 1985-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி அமெரிக்காவில் உள்ள இன்டியானா நகரில் நடந்தது. 5,151 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் பில்பிரான்சன் என்பவர் வெற்றி பெற்றார்.


சர்க்கரை நோய் கணையம் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை பாதிக்கும்.


யானைக்கால் நோய் கால்களைப் பாதிக்கின்றன.
 
பூமியின் மொத்த நிலப்பரப்பே 29 சதவீதம்தான். ஆனால் அதையும் விட பசிபிக் பெருங்கடலின் பரப்பளவு 35.5%.


பரப்பளவில் இலங்கையைப் போல இரு மடங்கு பெரியது தமிழ்நாடு.


யானைத் தந்தங்கள் சிறிது மஞ்சள் கலந்த வெள்ளை நிறமாக இருக்கும். ஆனால், ஆப்பிரிக்க யானைகளில் ஒரு சிலவற்றிற்கு கறுப்பு நிறத் தந்தங்கள் உள்ளன.


கஸ்தூரிமானின் கொம்புகள் பூமியில் புதைந்திருக்கும் கிழங்குகளைத் தோண்டி உண்ணவும், சண்டையிடவும் உதவுகின்றன.


மின்னல் தாக்கி அதிகளவில் பாதிக்கப்படும் நாடு பனாமா.


வெளவால்களின் குரலை மனிதர்கள் கேட்க முடியாது.


இடுக்கி நீர்மின் திட்டம் கனடா நாட்டு உதவியுடன் கட்டப்பட்டது.


வெளவால்களின் குரலை மனிதர்கள் கேட்க முடியாது.


ஒப்பிலக்கணத்தின் தந்தை என வீரமா முனிவர் அழைக்கப்படுகிறார்.


பசுமைப் புரட்சி முதன் முதலில் மெக்ஸிகோ நாட்டில் துவங்கியது.


தேசிய திரைப்பட விழாவின் சின்னமாக மயில் உள்ளது.


1971-ம் ஆண்டு முதல் தமிழக அரசு திருவள்ளுவர் ஆண்டை பயன்படுத்த ஆணையிட்டது.


உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம் ஆகும்.


விதியின் மனிதன் என மாவீரன் நெப்போலியன் அழைக்கப்படுகிறார்.


கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.


கோலா கரடிகள் இடதுகை பழக்கம் கொண்டவை.


பட்டாம்பூச்சிகள் கால்களால் சுவையை உணரும்.


எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப் போகாத உணவு தேன்.


மனித உடலில் சதை அழுத்தமாக உள்ள பகுதி நாக்கு.


தார் பாலைவனம் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளன.


தேனீ ஒரு செய்தியை தன் இனத்தில் உள்ள மற்றொரு தேனீயிடம் 8 என்ற எண் வடிவத்தில் நடனமாடித் தெரிவிக்கிறது.


ஆஸ்திரேலிய தேனீக்களுக்குக் கொடுக்கு இல்லை. இதனால் அவை கொட்டுவதில்லை.


தேனீக்களுக்கு மொத்தம் ஐந்து கண்கள் உள்ளன. தலையின் உச்சியில் மூன்று கண்களும், முன்பக்கத்தில் இரண்டு கண்களூம் உள்ளன.


தன் காலடியைத் தரையில் வைக்காத பறவை ஹரியாஸ் என்பதாகும்.


கொத்தமல்லியில் வைட்டமின் பி, பி2 மற்றும் சி ஆகிய சத்துக்கள் உள்ளன.


பாலைவனங்கள் பெரும்பாலும் கடக, மகர ரேகைகளின் அருகில் அமைந்துள்ளன.
 
 
 
Top