நம் எல்லோராலும் அதிகம் பயன்படுத்தப்படுகிற உறுப்பு கால். அதிகம் அலட்சியப்படுத்த ப்படுகிற உறுப்பும் அதுவே. கால் வலி என்பது வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் எப்போதாவது வரத்தான் செய்கிறது. கால் எரிச்சல், கணுக்கால் வலி, குதிகால் வலி என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியான வலி.

அதற்குக் காரணம் என்ன? எப்படிக் கண்டுபிடிக்கலாம ்? என்ன சிகிச்சை? விளக்கமாகப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார். ‘‘மற்ற வலிகளுக்கெல்லாம ் உடனே சிகிச்சைஎடுத்துக் கொள்கிற மக்கள், கால் வலியை மட்டும் ஏனோ அலட்சியம் செய்கிறார்கள். அதன் விளைவாக வலியுடனேயே வாழ்கிறார்கள். வலிக்கான காரணங்கள் தெரிந்தால், சிகிச்சைகள் சுலபமாகும்.

கால் எரிச்சலுக்கு முக்கிய காரணம், நீரிழிவு. சர்க்கரை நோய் இருப்பவர்களுக்க ு கால் எரிச்சல்சகஜம். நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மருந்துகளுடன், வைட்டமின் மற்றும் கால்சியம் மாத்திரைகளையும் தொடர்ந்து எடுத்துக் கொண்டால், இந்த எரிச்சல் குறையும். கூடவே கால்களுக்கான எளிய பயிற்சிகளையும், கால்களைப் பாதுகாக்கும் பயிற்சிகளையும் மருத்துவரிடம் கேட்டுச் செய்து வரலாம்.

குதிகால் வலி என்பது, நடுத்தர வயதில் தொடங்கி, வயதானவர்கள் வரைபாதிக்கிறது. பிளான்டர் எனப்படுகிற ஒருவித பாத சவ்வில் கால்சியம் படிவதாலோ, முன்பு எப்போதோ அடிபட்டதன் விளைவாலோ, தவறான ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிவதாலோ, பாத சவ்வு கிழிந்து வலி ஏற்படுகிறது. பெரும்பாலும் கால்களின் பக்கவாட்டில் வலி ஏற்பட்டு, நடக்கும் போது, அது அதிகமாகும்.

நாள் பட்ட மருந்துகள் பலனளிக்காத போது, ஓஸோன் வாயு சிகிச்சை, பிரத்யேக ஊசிகள் போன்றசிறப்பு சிகிச்சைகள் நிவாரணம் தரும். வலியுள்ள இடத்தை எக்ஸ் ரே மூலம் கண்டறிந்து, அந்த இடத்தில்ஊசியைச் செலுத்தும் போது வலி குறையும். இந்த சிகிச்சைகளை தேர்ந்த மருத்துவர்களிடம ் மட்டுமே செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

கணுக்கால் வலி என்பது மூட்டு தேய்மானத்தால், முழங்கால் வளைந்திருப்பதால ், உடல் எடை கணுக்கால்களில் தவறாகச் செல்வதால், உடல் பருமன் அதிகமாவதால் வரக்கூடியது. இதற்கான காரணத்தையும் எக்ஸ் ரே மற்றும் சிடி ஸ்கேன் மூலம் கண்டறிந்து, கணுக்கால் நரம்பில் ஊசி மூலம் மருந்துகளைச் செலுத்தி வலியைக் குறைக்கலாம்.

மேலே சொன்ன 3 வலிகளுக்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டு, வலி குறைந்ததும், முறையான பிசியோதெரபி பயிற்சியை தினமும் பின்பற்ற வேண்டும். சத்தான சாப்பாடும் அவசியம். அப்போதுதான் மறுபடி வலி வராமல் வாழ முடியும்...’’ என்கிறார்

 
Top