ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.

இளைய பாரத்த்தினாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
-மகா கவி பாரதி.

நல்ல மனிதர்கள் அரசாங்கத்தில் பங்கு ஏற்க மறுப்பதற்கான தண்டனையை தீயவர்களின் ஆட்சியில் வாழ்வதிலேயே செலுத்துகிறார்கள்.
-பிளாட்டோ

நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன்.
-கவிஞர் ஷெல்லி.

“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.
- வால்ட் விட்மல்

“நேர்மையாக இருப்பவன் தன்னிடன் இல்லாததை இருப்பதாகக் கூறி தற்பெருமை வேண்டிப் பாசாங்கு செய்ய மாட்டான். தைரியமுடன், தான் எதுசரி என்று நம்புகிறானோ, அதற்காக உலகமே எதிர்த்து நின்றாலும் போராடுவான்.

நம்பிக்கைக்குரிய தன்மைகளைக் கொண்டவன் பிறரை மதிப்பான். எதிரியையும் மதிப்பான். மனித உறவுகளின் பண்பைக் கடைப்பிடிப்பான். அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து எழுகின்றன”.
-டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி

'தான் செய்வதை யாரும் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று வெளிப்படையாக, திட்டவட்டமாகத் தெரிந்திருக்கும் போது ஒருவன் என்ன செய்கின்றானோ, அந்தச் செயலைக்கொண்டு, அவனுடைய உண்மையான குணத்தை அறிந்துகொள்ளலாம்!" - தோமஸ் மெகாலே
* எது தேவை என்று தீர்மானிக்க மனம், வழி வகுக்க அறிவு, செய்து முடிக்க கை - கிப்பன்.

* முன்னேற்றம் என்பது இன்றைய செயலாக்கம், நாளைய உறுதி நிலை - எமர்சன்.

* சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவன், அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை - கவுப்பர்.

* வாழ்வதில்தான் இன்பம், உழைப்பதில்தான் வாழ்வு - டால்ஸ்டாய்.

* சுமை அதிகமாக உள்ளது என்று தோன்றினால் நீங்கள் மேலே ஏறிக்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள் - அனாஸி.

* பேசிய பிறகு வருந்துவதைவிட பேசுவதற்கு முன்பே யோசனை செய்வது மிகவும் நல்லது - டேவிட் கியூம்.

* காலத்தின் மதிப்பு உனக்குத் தெரியுமா? அப்படியானால் உனக்கு வாழ்வின் மதிப்பும் தெரியும் - நெல்சன்.


* உண்மையே சிந்தனையை வளமாக்கும் - வள்ளலார்.

* அன்பில்லாதவன் கடவுளை அறிய முடியாது - இயேசு.

* வாய்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் - நபிகள் நாயகம்.

* பிரார்த்தனைகளை விட மிக உயர்ந்தது பொறுமை - புத்தர்.

* நிறைய பேசாதே நிறைய கேள் - காந்தியடிகள்

* அன்பு இருக்குமிடமே சொர்க்கம் - திருமூலர்.

* சந்தேகம் விவேகத்தின் தொடக்கம், முடிவல்ல.

* ஒரு வினாடி நாம் செய்யும் தவறு வாழ்க்கை முழுவதும், வேதனைகளை தேடித் தருகிறது.

* துருப்பிடித்து தேய்வதைவிட உழைத்துத் தேய்வது மேலாகும்.

* கருணையும், இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்றழைக்க முடியாது.

* சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன.

* பலவீனருடைய பாதையில் தடையாயிருக்கும் கல், பலமுள்ளவர்களின் பாதையில் படிக்கல்லாய் இருக்கும்.

* தேவையில்லாதவற்றை விலைக்கு வாங்கினால் தேவையுள்ளவற்றை விரைவில் விற்க நேரிடும் - பெஞ்சமின் பிராங்கிளின்.

* எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளே குடி கொண்டிருக்கின்றன. உன்னால் எதையும் சாதிக்க முடியும் - சுவாமி விவேகானந்தர்.

* தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்கக் கூடாது தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது - லெனின்.

* மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை. அவன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான் - புத்தர்.

* வெளியில் உள்ள வறுமையைவிட மனதில் உள்ள வறுமையே அபாயமானது - டாக்டர் ராதாகிருஷ்ணன்.

* துணிந்து நின்று செயல்படுகிறவன்தான் அடிக்கடி வெற்றி சிகரத்தை அடைகின்றனர் - நேருஜி.

* நேரத்தை தள்ளிப் போடாதீர்கள், தாமதங்கள் அபாயமான முடிவைக் கொண்டுள்ளன - ஷேக்ஸ்பியர்.

* புகழை நோக்கி ஓடாதீர்கள். புகழை நீக்கியும் ஓடாதீர்கள் - மான்டெய்ன்.
 
 
Top