நம்மில் பலர் வரி இல்லா பத்திரங்கள் பற்றி படித்து மற்றும் கேட்டு
தெரிந்திருப்போம். உண்மையில் வரி இல்லா பத்திரங்கள் என்றால் என்ன?. வரி
இல்லா பத்திரங்களில் செய்யப்படும் முதலீட்டிற்கான, வருமானத்திற்கு வரி கட்ட
தேவை இல்லை.
வரி இல்லா பத்திரங்களின் வருமானத்திற்கு, வரி பிடித்தம் செய்யப்படுவது
இல்லை.
மேலும், இந்த வருமானம், வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்தில் ஒரு
அங்கமாக கருதப்படாது. இத்தகைய பத்திரங்கள் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள்
மூலம் வழங்கப்படுகிறது. எனவே, இது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
இந்திய அரசாங்கம் கடன் நெருக்கடி பிரச்சனையில் சிக்கினால் மட்டுமே, இந்தகைய
பத்திரங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த பத்திரங்கள் என்எஸ்இ மற்றும்
பிஎஸ்இ சந்தைகளில் விற்கப்படுகின்றன.
எனினும், இத்தகைய பத்திரங்கள் பங்கு போல் பெரிய அளவில் வர்த்தகம்
செய்யப்படுவதில்லை. வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வரும் இந்த
நேரத்தில், அரசாங்கத்தின் வரி இல்லா பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு
ஒரு நேர்மறையான பந்தயம் ஆகும்.
2012-13 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப்
முகர்ஜி, நிறுவனங்கள் சுமார் இரண்டு மடங்கு தொகையை திரட்டிக் கொள்ள அனுமதி
அளித்தார். அதாவது நிறுவனங்கள் 2012-2013 ஆண்டிற்கு சுமார் ரூ 60,000 கோடி
திரட்ட முடியும். இது 2011-2012 ஆண்டைப் போல இரண்டு மடங்காகும். NHAI ரூ
10,000 கோடியும், IRFC ரூ 10,000 கோடியும், IIFCL ரூ 10,000 கோடியும்,
HUDCO ரூ 5,000 கோடியும், தேசிய வீட்டு வசதி வங்கி 5,000 கோடியும், SIDBI
ரூ 5,000 கோடியும், துறைமுகங்களுக்கு ரூ 5,000 கோடியும், எரிசக்தி துறை
10,000 கோடியும் நிதி திரட்டிக் கொள்ள அனுமதி அளிக்கபட்டுள்ளது.
இந்த பத்திரங்கள் நீண்ட கால முதலீட்டை தேர்ந்தெடுத்து, இரண்டம் நிலை சந்தை
வழியாக வெளியேற நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த
பத்திரங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ததன் மூலம், கடந்த ஆண்டு
அவர்கள் முதலீட்டு நிறுவனத்தை பொறுத்து 8.20 முதல் 8.35 சதவீதம் வரை வரி
இல்லா வருமானத்தை பெற்றார்கள்.
உதாரணமாக, HUDCO நிறுவனத்தின் வரி இல்லா பத்திரத்தில் 8.35% வட்டிக்கு 15
ஆண்டு கால அளவிற்கு பிப்ரவரி 2012 ல் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக்
கொள்ளுங்கள். உங்களுடைய வரிக்கு பிந்தயைய வருவாய் 8.35% ஆகும். அதே கால
கட்டத்தில் ஒரு வைப்பு நிதியில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருந்தால்
சுமார் 9% வரிக்கு முந்தய வருவாய் கிடைக்கும். 20% வரி செலுத்துபவர் எனில்,
உங்களுடைய வரிக்கு பிந்தய வருவாய் 7.2% ஆகும். அதேசமயம் 30% வரி
செலுத்துபவர் எனில் உங்களுடைய வரிக்கு பிந்தய வருவாய் 6.3% மட்டுமே. எனவே
20 மற்றும் 30% வரி செலுத்தும் நபர்களுக்கு
இந்த வரி இல்லா பத்திரங்கள் ஒரு
சிறந்த முதலீடாகும்.
இத்தகைய பத்திரங்களை, வரி சேமிக்கும் பத்திரங்களுடன் ஒப்பிட்டு
குழம்பக்கூடாது. 80 சிசிஎப் பிரிவின் படி, வரி சேமிக்கும் பத்திரங்கள்
மூலம் கிடைக்கும் வருவாய், வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்தில் ஒரு
அங்கமாக கருதப்படும். சமீபத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற
மேம்பாட்டு கழகம், தங்ளுடைய வணிக விரிவாக்கத்திற்காக ரூ 10,000 கோடி
நிதியை வரி இல்லா பத்திரங்கள் மற்றும் பிற உபகரணங்கள் மூலம்