கணக்கில் சூரப்புலியா நீங்கள்? கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று ஆசை உள்ளதா?
அப்படியென்றால், இந்த கணக்குக்கு விடை சொன்னால் உங்களுக்கு 1 மில்லியன்
டொலர் பரிசு கிடைக்கும். அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆன்டி பீல். கோடீஸ்வரர்.
கணக்கின் மீது தீராத காதல் கொண்டவர். அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள கணித
அமைப்பு (ஏஎம்எஸ்) ஒரு புதிய யூக வடிவ, சவால் கணக்கு ஒன்றை வெளியிட்டது.
இதற்கு யாராவது தீர்வு கண்டால், அதற்கு 5000 டொலர் பரிசு தருவதாக, 1997ல்
ஆன்டி பீல் அறிவித்தார். ஆனால், 17 ஆண்டுகளாகியும் கூட ஏஎம்எஸ்ஸின் யூக
கணக்குக்கு யாராலும் தீர்வு காண முடியவில்லை. இந்நிலையில், இந்த
கணக்குக்கான பரிசுத் தொகையை 1 மில்லியன் டொலராக உயர்த்தி அறிவித்துள்ளார்.
ஆன்டி
பீல். இதையடுத்து இந்த கணக்கின் பெயரை, பீல் கன்ஜெக்ஜர் என்று பெயர்
சூட்டியுள்ளது, ஏஎம்எஸ். இதேபோல், இதற்கான பரிசுத்தொகைக்கு, பீல் பரிசு
(Beal Prize) என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இவ்வளவு மதிப்பு வாய்ந்த அந்த
கணக்கு: Ax+By=Cz. A, B, C, x, y, z ஆகியவை நேர்மறை முழு எண்கள். மேலும்,
x, y, z ஆகியவை 2ஐ விட பெரியவை. மேலும் , A, B, C ஆகியவை கட்டாயமாக பிரதம
பொது காரணியாக இருக்க வேண்டும்.(If Ax + By = Czwhere A, B, C, x, y and z
are positive integers and x, y and z are all greater than 2, then A, B
and C must have a common prime factor) விடை தெரிந்தால், ஏஎம்எஸ்
அமைப்பிடம் நீங்களும் விண்ணப்பிக்கலாம்.