401 (a). அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது.

401 (b). Things past cannot be recalled.



402 (a). ஒரு கண்ணில் வெண்ணை; மறு கண்ணில் சுண்ணாம்பு.
402 (b). To cry with one eye and laugh with the other.



403 (a). குட்டையைக் குழப்பு.
403 (b). To fish in troubled waters.



404 (a). செத்த பாம்பை அடிப்பவன்.
404 (b). To flog a dead horse.



405 (a). விழித்த முகம் சரியில்லை.
405 (b). To get out of the bed on the wrong side.



406 (a). சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது.
406 (b). To give a lark to catch a kite.



407 (a). பிள்ளையார் பிடிக்கக் குரங்கானது.
407 (b). To go for wool and come back shorn.



408 (a). தாயை போல பிள்ளை. நூலைப் போல சேலை.
408 (b). As is the mother, so is the daughter.



409 (a). சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
409 (b). Little pigeons can carry great messages.



410 (a). எறும்பூரக் கல்லும் தேயும்.
410 (b). Little strokes fell great oaks.

 
Top