ஸ்ரீலக்ஷ்மி சுரேஷ்...
இது தான் இந்தச் சிறுமியின் பெயர்.
இவர்தான் 7 வருடங்களுக்கு முன்பே தனது பள்ளியின் வெப்சைட்டை வடிவமைத்து தலைப்புச் செய்திகளில் தென்பட்டவர்.
இப்பொழுது மீண்டுமொரு அவதாரம். இம்முறை உலகையே நிமிர்ந்துபார்க்கவைத்துள்ள
10-ஆம் வகுப்பு பயின்றுவரும் இவர் வெப்டிசைன் துறையில் சிறந்த அறிவைக்கொண்டவர். இவருடன் மேலும் 5 மாணவமாணவியர் இனைந்து மொத்தம் 6 பேர் இந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம். அனைவருக்கும் ஸ்ரீலக்ஷ்மி தான் CEO. பார்க்கப்போனால் உலகிலேயே 15 வயதில் CEO அந்தஸ்தைப் பெற்ற பெருமையும் முதல் பெண்ணும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "வரும் ஜூலை மாதம் முதல் கோழிக்கோட்டில் உள்ள சைபர் பார்க் என்ற இடத்தில் எங்களது அலுவலகம் செயல்படும், வெப்டிசைன் மட்டுமல்லாமல், டொமைன் ரிஜிஸ்ட்ரேசன், ஹோஸ்டிங், அதுசார்ந்த அனைத்து வசதிகளையும் வழங்கவுள்ளோம். முதலில் 20 பணியாளர்களுடன் நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளோம். இதற்காக ரூ.50 லட்சம் முதலீடு செய்துள்ளோம்." என்றார்.