"கோ-எட்' கல்லூரியில், பயிலும் மாணவன் நான். எங்கள் கல்லூரி மாணவி ஒருத்தியின் நட்பு, எனக்கு கிடைத்தது. இருவரும் பொதுவான விஷயங்கள் பேசுவதோடு, ஓட்டலில் காபி, டிபன் சாப்பிடுவது வரை பழகினோம். ஒரு நாள் போனில் பேசும் போது, "எங்கள் வீட்டுக்கு வந்து, ஒரு நாள் தங்கி விட்டுப் போயேன்!' என, விளையாட்டாக கேட்டேன். "ச்சீ... ஆசையைப் பாரு... குரங்கு, பிசாசு...' என, என்னை செல்லமாகத் திட்டினாள். உடனே, அவள் என்னோடு நெருக்கமாக பழகுவதாக கருதிய நான், போனிலேயே, ஒரு முத்தம் தருமாறு கேட்டேன். சட்டென போனை, "கட்' செய்து விட்ட அவள், அதன் பின், என்னோடு பேசாமல், என் நட்பையும் துண்டித்து விட்டாள்.

இப்போது நட்பை இழந்த வேதனையில் நான் துடிக்கிறேன். இளைஞர்களே... உங்கள் தோழியரின் நெருக்கத்தை, சரியாக கணிக்காமல், அவசரப்பட்டு இது போல உரிமையோடு பேசி விடாதீர்கள். இது, நட்பையே பாதித்து விடும். பேச்சிலும், செய்கையிலும் சற்று கண்ணியம் இருக்கட்டும். அது, நட்பை பலப்படுத்தும்.
 
Top