என் நண்பர் சமீபத்தில், ஒரு பள்ளிக்கு டிரைவர் பணிக்காக, இன்டர்வியூவிற்கு சென்றிருந்தார். இன்டர்வியூவில், முன் அனுபவம், குடும்பநிலை, எதிர்பார்க்கும் சம்பளம் எல்லாவற்றையும் கேட்டறிந்த பள்ளித் தாளாளர், கடைசியாக, ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்று, சில பரிசோதனைகளை செய்து, ரிப்போர்ட் கொண்டு வரும்படி கூறியிருக்கிறார்.
அதற்கு நண்பர், "சார், எதற்கு இந்த பரிசோதனைகள்' என்று கேட்டதற்கு, தாளாளர் கூறியது, "உங்கள் உடலில் ஆல்கஹால் அளவு எப்படி உள்ளது, நீங்கள் தினமும் குடிப்பவரா என்பதையெல்லாம், நாங்கள் அறிந்து கொள்வதோடு, உங்களுக்கு தொற்றுநோய் எதுவும் உள்ளதா என்பதும், எங்களுக்கு தெரிய வேண்டும். ஏனெனில், சிறு குழந்தைகள் உங்களோடு வண்டியில் வரும்போது, அவர்கள் பாதிக்கப்படக்கூடாது அல்லவா...' என்று தெளிபடுத்தியிருக்கிறார்.

புகைபிடித்தல், மது அருந்துதல், செல்போன் பேசுதல் போன்ற விஷயங்களில் கெடுபிடியாக இருக்கும் பல பள்ளிகள், இது போன்று ஆரோக்கியமான டிரைவர்களை பணி நியமனம் செய்வது, குழந்தைகளுக்கு பாதுகாப்பாக அமையும்.
 
Top