நான் செய்யும் சேட்டைகளை ரசிப்பவன்.

நான் தவறே செய்தாலும் எனக்கு ஆதரவாய் குரல் கொடுப்பவன்.

என்னிடம் சண்டையே போட்டாலும் ஒரு நொடியில் மறந்து விடுவான்.

நான் முதல் முதலில் அழுத பொழுது என்னை பார்த்து சிரித்தவன்.

நான் விழுந்தால் அவனுக்கு அடிபட்டது போல் துடிப்பவன்.

என்னை அவன் கையில் மட்டும் அல்ல நெஞ்சிலும் தாங்கியவன்.

ஆனால் அவனுடன் என் வாழ்நாள் முழுவதையும் செலவிட முடியவில்லை..... என் முதல் காதலன் என் தந்தை என்பதால்.
 
Top