தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன் நான். பணியில்
இருக்கும்போது இ.எஸ்.ஐ வசதியை அனுபவித்து வந்தேன். ஓய்வுக்குப் பிறகும்
அதன் பயனைப் பெறலாம் என அறிந்து, அது குறித்து இ.எஸ்.ஐ அலுவலகத்தில்
கேட்டேன். பணிபுரிந்த அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றதற்கான சான்றும்,
ஐந்து வருடங்கள் இ.எஸ்.ஐ கட்டியதற்கான ஸ்டேட்மென்ட்டும் வேண்டுமென்று
கேட்கிறார்கள். நான் வேலை பார்த்த
அலுவலகத்தில் இழுத்தடிக்கிறார்கள். வயதான காலத்தில் அந்த மருத்துவச் சலுகை
எனக்கும் எனது மனைவிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். மேற்படி ஆவணங்கள்
இல்லாமல் இ.எஸ்.ஐ வசதியைப் பெற வாய்ப்பு உள்ளதா?
பதில் சொல்கிறது இ.எஸ்.ஐ மண்டல அலுவலகம், சென்னை.
‘‘இ.எஸ்.ஐ எனப்படும் ‘பணியாளர் காப்பீட்டுக் கழகம்’, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நலனுக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பு. அதன்படி, மாதந்தோறும் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் நிறுவனத்தால் பிடித்தம் செய்யப்படும். அதே அளவு நிதியை பணி வழங்கும் நிறுவனமும் சேர்த்து இ.எஸ்.ஐக்கு செலுத்தும். அந்த நிதியை ஆதாரமாகக் கொண்டு ஊழியர்களின் குடும்பத்துக்கு (கணவன், மனைவி, திருமணமாகாத பிள்ளைகள்) மருத்துவ வசதிகளை இ.எஸ்.ஐ அளிக்கும்.
இதற்காக நாடு முழுக்க மருத்துவமனைகள் உள்ளன. பெரிய பெரிய பிரச்னைகளுக்கெல்லாம் கூட எங்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைக்கிறது. விபத்து ஏற்பட்டு வேலைக்குச் செல்ல முடியாமல் ஊதியத்தை இழக்கும் நிலை ஏற்பட்டால், பென்ஷன் மாதிரியான நிதி உதவியையும் வழங்குகிறது இ.எஸ்.ஐ. பணிக்காலத்தில் குறைந்தது ஐந்து வருடம் இ.எஸ்.ஐ வசதியை அனுபவித்தவராக இருந்தால் போதும். அந்த ஐந்து வருடங்கள்கூட தொடர்ச்சியானதாக இருக்க வேண்டும் என்றில்லை.
ஓய்வுக்குப் பிறகும் குடும்பத்தில் கணவன் மனைவி இருவருக்குமே வாழ்நாள் முழுக்க இந்த வசதி உண்டு. ஆனால் ஓய்வுக்குப் பிந்தைய காலத்தில் மாதம் பத்து ரூபாய் மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும். தங்களது விஷயத்தைப் பொறுத்தவரை வேலை பார்த்த நிறுவனம் சான்று தரவில்லை என்கிறீர்கள். பிரச்னை இல்லை. தங்களுடைய ஐ.பி. எண் (insured person) இருந்தால், அதைக் குறித்துக் கொண்டு அருகிலுள்ள எங்களது கிளை அல்லது மண்டல அலுவலகத்தை அணுகலாம். எங்களது அலுவலக பதிவேடுகளில் தாங்கள் இ.எஸ்.ஐ செலுத்திய விபரங்கள் இருக்கும்பட்சத்தில், தங்களுக்கு வாழ்நாள் முழுக்க மருத்துவ வசதிகள் கிடைக்கும்.