11 பரிமான காட்சி அமைப்பு கொண்ட நவீன 11-டி திரையரங்கு ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் திறந்து வைக்கப்பட்டது. இடி, மின்னல், பனி, புகை, மழை போன்ற காட்சியமைப்புக்கு ஏற்ப உணர்வுகளை வெளிப்படுத்துவது 11-டி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சமாகும். ஒலியமைப்புக்கு தக்கபடி இருக்கையில் திடிர் அதிர்வு, நகைச்சுவை காட்சிகளில் கால் பாதத்தில் கூச்சத்தை ஏற்படுத்துதல் போன்ற நவீன தொழில்நுட்பம் இந்த திரையரங்குகளில் பயன்படுத்தப்படும்.

16 வகையான ஸ்பெஷல் எஃபெக்ட்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த திரையரங்கு கூஸ பம்ப்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக 1.30 மணி நேரம் ஒடக்கூடிய 11-டி திரைப்படங்கள் மட்டுமே இதில் திரையிடப்படும். தினமும் 24 காட்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள-து. திங்கள் முதல் வியாழன் வரை டிக்கெகட் கட்டணமாக ரூ.150, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.175 வசூலிக்கப்படும்.
 
Top