படத்திலுள்ளவர் சுனால் லிகடே. பெங்களூரை சேர்ந்த இவர், "ஸ்ப்ரே பெயின்டிங்' மூலம், கண்ணைக் கவரும் ஓவியங்களை உருவாக்குவதில் வல்லவர். ஒரு நாள் போரடித்த போது, தன் நண்பர் அனுமதியுடன், அவர் வீட்டு பாத்ரூமில் தன் கை வண்ணத்தை காட்டியுள்ளார். ஓவியத்தை பார்த்து, அசந்து போன நண்பர், மற்றவர்களிடம் லிகடேவை அறிமுகப்படுத்த, அடுத்த இரண்டரை ஆண்டுகளில், 10 - 15 பாத்ரூம்களில் தன் கை வண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது, அதற்கெல்லாம் அவர் பணம் பெற்றுக் கொள்ளவில்லை. தங்கவும், சாப்பாட்டிற்கும் ஏற்பாடு செய்தால் போதும் என்று கூறிவிட்டார்.

இன்று, ஒரு பாத்ரூமுக்கு 10 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் என ஆர்டர் வாங்கி, ஓவியம் தீட்டி, அசத்தி வருகிறார். பாத்ரூம் மட்டுமல்ல, வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள கண்ணாடிகள், கதவுகள், சுவர்கள் மற்றும் டாய்லெட் என, எல்லா இடங்களிலும், ஸ்ப்ரே பெயின்டிங் செய்கிறார்.
பிரபல நடிகர் நஸ்ரூதின் ஷா, அவர் வீட்டு பாத்ரூமில், ஸ்ப்ரே பெயின்டிங் செய்ய இவரை நாடியுள்ளார்.பெங்களூரு ரயில்வே அதாரிட்டீஸ், தன்னை ரயில்வே பாத்ரூமில் ஸ்ப்ரே பெயின்டிங் செய்ய வாய்ப்பளித்தால் அசத்த தயார் என்கிறார் இந்த புதுமை ஓவியர்.
 
Top