அதிசயக்தக்க அதிசயங்களை நிகழ்த்துவதில், சீனர்களை மிஞ்ச முடியாது. இங்குள்ள, செங்டு என்ற நகரில், உலகின் மிக பிரமாண்டமான கட்டடம், சமீபத்தில் திறக்கப்பட்டது. 100 மீட்டர் உயரம், 500 மீட்டர் நீளம், 400 மீட்டர் அகலம் உடைய, இக் கட்டடம், 17 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.

இதில், பிரமாண்டமான வர்த்தக வளாகம், செயற்கை நீரூற்று, செயற்கை கடற்கரை, அலுவலகங்கள், நட்சத்திர ஓட்டல்கள், கருத்தரங்க அறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. சீனாவின், புதிய அடையாளமாக உருவெடுத்துள்ள இந்த கட்டடத்துக்கு, "புதிய நூற்றாண்டின் உலக வர்த்தக மையம்' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 இதைப் பார்ப்பதற்காக, சீனா முழுவதிலுமிருந்து, சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

 
Top