படத்தில் உள்ளவர் பெயர் மாணிக்கன். இவர் கூலி வேலை செய்து, தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்நிலையில், திடீரென்று ஒரு கை செயலிழந்து போகவே, கூலி வேலைக்கு போக முடியவில்லை.

தினமும், கொஞ்சம் உ.பா., சாப்பிட்டால் தான், தூக்கம் வரும் என்ற நிலையில், ஒருநாள் தன் நண்பருடன் உ.பா., அருந்திக் கொண்டிருந்த போது, "வாழ ஒரு வழி இல்லையே...' என வருத்தப்பட்டுள்ளார். "அப்படின்னா... என்னுடைய ஒரு ஆட்டை, உனக்கு தருகிறேன் வச்”ப் பொழச்”க்கோ...' என்று கூறி, ஒரு ஆட்டை தந்திருக்கிறார் அந்த நண்பர். ஆண்டுகள் பல கடந்து. தற்போது, மாணிக்கனிடம் 62 ஆடுகள் உள்ளன.

ஆனால், ஆடுகளின் நண்பனாக மாறிவிட்ட மாணிக்கன், ஆடுகளை இறைச்சிக்காக விற்க மாட்டார். அதன் பால் குட்டிக்கு மட்டுமே சொந்தம். எனவே, பால் கறந்து விற்பதும் இல்லை. ஆதிவாசியான இவர் ஆட்டுக் கூட்டத்தை மலையில் மேயவிட்டு, அதை பார்த்து ரசித்து வருகிறார். ம்...இப்படியும் சில மனிதர்கள்.
 
Top