ஒரு காலத்தில் ஒரு டஜன் பாடல்களுடன் ஏறக்குறைய ஐந்து அல்லது ஆறு மணி நேரம்
படம் ஓடும், சாப்பாடு கட்டிக்கொண்டு போய் பார்த்ததாக அந்தக்கால ஆட்கள்
சொல்ல கேட்டுருக்கிறேன்.
அதன்பின் அதுவே ஆறு பாடல்களுடன் மூன்று மணி நேர படமாக சுருங்கியது. ரெண்டு மணி நேரமும் சில படங்கள் ஓடுகிறது.
இப்போது அதையெல்லாம் தூக்கி சாப்பிடுவதுபோல், அதிகபட்சம் அரை மணி நேரத்தில் ஒரு படத்தை முடித்து விடுகிறார்கள். அது குறும்படம்.
வருடக்கணக்கில் இழுக்கும் மெகா சீரியலை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்தான் இப்படிப்பட்ட குறும்படத்தையும் ரசிக்கிறார்கள் என்பது முரண்.

நண்பர் கார்த்திக் பாரதி ......
மகாகவி பாரதியின் மேல் தீவிர பற்றால் தன் பெயருக்கு பின்னால் பாரதியை
இணைத்துக்கொண்டவர் கார்த்திக் பாரதி. பாரதியின் நினைவு நாளான இன்று அவரின்
அபிமானியான கார்த்திக் இயக்கிய இயக்கிய இரண்டாவது குறும்படத்தை உங்கள்
பார்வைக்கு வைக்கிறேன். பார்த்துவிட்டு கருத்தை பதியுங்கள்.