ஒரு கட்டடப் பொறியாளரிடம் நெடுநாட்களாக ஒரு மேஸ்திரி வேலை பார்த்தார்.
ஒருநாள் தாம் உடனே ஓய்வு பெற விரும்புவதாகத் தெரிவித்தார்.
ஒரு நிமிடம் தயங்கிய பொறியாளர்,
"சரி... ஒரே ஒரு வீடு மட்டும் கடைசியாக கட்டி தாருங்கள்... ஆனால், இடையில் நான் அங்கு வந்து பார்க்க மாட்டேன்... முழு பொறுப்பையும் நீங்களே எடுத்துக்கொள்ள வேண்டும்.."என்று ஒரு வீட்டின் கட்டுமான பணியை ஒப்படைத்தார்.
மேஸ்திரி கோபத்துடனும் எரிச்சலுடனும் வேண்டா வெறுப்பாக வேலை செய்தார்.
தரக் குறைவான பொருட்கள்... தரக் குறைவான கட்டுமானம்.
முதலாளியைப் பழிவாங்கும் வெறுப்பில் பணியை முடித்து, வீட்டு சாவியை ஒப்படைத்தார். அதே சாவியை மேஸ்திரியிடம் திருப்பிக் கொடுத்த முதலாளி சொன்னார்,
"அந்த வீடு உங்களுக்கான என் அன்பு பரிசு... நீண்ட நாள் நீங்கள் காட்டிய விசுவாசத்திற்கான நன்றி காணிக்கை" என்றார்.
இடி இறங்கிய மாதிரி இருந்தது மேஸ்திரிக்கு.
"அடடா... தனக்கு என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால் இப்படி மோசமாக கட்டி இருக்க மாட்டேனே" என மனதுக்குள் புளுங்கிக்கொண்டார்.