அமர்ந்திருந்தவர்களுக்கு ஒரு நகைச்சுவையைக் கூறினான்.
அனைவரும் நீண்டநேரம் கைதட்டிச் சிரித்தனர்.
பின்னர் மீண்டும் அவன் அதே நகைச்சுவையைக் கூறினான். அப்போதும் பலர் கைதட்டிச் சிரித்தனர்.
மீண்டும் அதே நகைச்சுவையை அவன் சொன்னான். அப்போது சிலர் மட்டும் சிரித்தனர்.
மீண்டும் அவன் அதே நகைச்சுவையைச் சொன்னபோது எவரும் சிரிக்கவில்லை.
அப்போது அந்த அறிவாளி சொன்னான், ஒரு நகைச்சுவையை மீண்டும் மீண்டும் சொல்லும்போது தொடர்ந்து உங்களால் சிரித்து மகிழமுடியவில்லை
அல்லவா? ஆனால் எதற்காக நாம் எல்லோரும் வாழ்வில் நடந்த ஒரு சில துன்பங்களை மட்டும் மீண்டும் மீண்டும் நினைத்து கவலைப்படுகிறோம்?
இதேபோல ஒரு துன்பதிற்காக வாழ்நாள் முழுவதும் எதற்காக கவலைக்கொள்ள வேண்டும்??
சம்பாதித்தோம் ஜாலியாக இருந்தோம், சேமித்து வைக்காமல் விட்டுவிட்டோம். இழந்ததை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பானேன். இப்போது சம்பாதிப்பதில் சேமிப்போம், வாழ்க்கையையும் வாழ்வோம்!