நாட்டில் உள்ள, மிக பழமையான பல்கலைக்கழகங்களில், கோல்கட்டாவில் உள்ள, பிரசிடென்சி பல்கலையும் ஒன்று. சமீபகாலமாக, புதிய படிப்புகளை அறிமுகம் செய்வதில், இந்த பல்கலை, மற்ற பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. அடுத்த கல்வியாண்டிருந்து, பல புதிய படிப்புகளை, இந்த பல்கலை அறிமுகப்படுத்த உள்ளது.

அதில் ஒன்று தான், காதல் படிப்பு. காதல் ஏற்படுவது ஏன் என்றும், காதலால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து கற்றுத் தரப் போகின்றனர். இந்த பல்கலையின், சமூகவியல் துறை சார்பில் தான், இந்த படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. "பழமையான பாடத் திட்டங்கள், தற்போதைய கால சூழலுக்கு ஒத்துப் போவதில்லை. அதனால் தான், புதிய பாடங்களை அறிமுகப்படுத்துகிறோம். இதற்கு, மாணவர்களிடையே, நல்ல வரவேற்பு கிடைக்கும் என, நம்புகிறோம்' என்கிறது, பல்கலை நிர்வாகம்.
 
Top