http://img.dinamalar.com/data/uploads/E_1380874589.jpeg
உலகின் மிக உயரமான விமான நிலையம், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின், காம்தோ பம்தா என்ற இடத்தில் அமைந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து, 4,334 மீட்டர் உயரமுள்ள, இந்த விமான நிலையத்தை மிஞ்சும் வகையில், தற்போது, மீண்டும், ஒரு விமான நிலையத்தை அமைத்துள்ளது, சீன அரசு. இந்த விமான நிலையமும், திபெத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. டாசெங் யாடிங் என்ற இடத்தில், கடல் மட்டத்திலிருந்து, 4, 411 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள, இந்த விமான நிலையம் தான், தற்போது, உலகின் மிக உயரமான விமான நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

 டாசெங் யாடிங் மகாணத்திலிருந்து, செங்டு மாகாணத்துக்கு, தரை வழியாக செல்வதற்கு, இரண்டு நாட்களாகும். இப்போது விமான நிலையம் அமைக்கப்பட்டு விட்டதால், வெறும், 65 நிமிடங்களில், இந்த தூரத்தை கடந்து விட முடியும். செங்டுவிலிருந்து, டாசெங் யாடிங்கிற்கு செல்வதற்கான விமான கட்டணம், 13 ஆயிரம் ரூபாய்.
 
Top