காலிமனை குறித்து தெரிந்து கொள்ளுதல்: மனையை விற்பவரிடம் இருந்து அது குறித்து அறிந்து கொள்தல் முக்கிய கடமை. சென்னை மாநகரத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தால், சென்னை பெருநகர வளர்ச்சி கழகத்திடம் (சிஎம்டிஏ) அனுமதி பெற்ற வரைபடம் மற்றும் விலை நிர்ணய சான்றையும் சரி பார்க்க வேண்டும். மேலும் இதர நகர பகுதியாக இருந்தால் நகராட்சியின் அனுமதி சான்றை கவனிக்கவும்.
சாலைகள் மற்றும் பூங்காக்கள் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சாலையோரம் மனை அமைந்திருந்தால், அது உள்ளூர் நிர்வாகம் மூலம் பராமரிக்கப்படுமா என்பதை அறிய வேண்டும். சிஎம்டிஏவின் கட்டுப்பாட்டு விதிமுகைள் பின்பற்றப்பட்டு உள்ளனவா என்பது உட்பட மனைக்கான உரிய ஆவணங்கள், சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். மேலும் மனை வாங்கிய இடத்தில் வீடு கட்டிய பின் எதிர்காலத்தில் ஏதேனும் காரணங்களுக்காக வீடு இடிக்கப்படுதல் போன்ற பிரச்னை வராமல் சரியாக கையாள வேண்டும்.
வீடு வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டியவை: கட்டுமான நிறுவனம் அல்லது தனியாளிடம் இருந்திடம் இருந்து வீடு வாங்குவதற்கு முன் அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு முறையான வரைபட அனுமதி வாங்கப்பட்டுள்ளனவா என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். கட்டுமானம் நிறுவனம் அனுமதி வாங்கியபடி குடியிருப்பை திட்டமிட்டு கட்டியுள்ளதா அல்லது ஏதேனும் விதி மீறல்கள் நடந்துள்ளனவா என்பதை அறிய வேண்டும்.
குடியிருப்பின் உண்மையான உரிமையாளர் மற்றும் அதன் பங்குதாரர்கள் குறித்து கேட்டறிய வேண்டும். நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளனவா என்பதுடன், கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின் சிஎம்டிஏ முழுவதும் சோதனை செய்துவிட்டதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் மனையோ அல்லது வீடோ வாங்குவதற்கு முன் அதுகுறித்து சிஎம்டிஏவிடம் தொடர்பு கொண்டு சந்தேகங்கள் உட்பட தனக்கு தேவையான அனைத்து விவரங்களையும் கேட்டறிதல் மிகவும் முக்கியம்.
அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கும் இடம்
தொழிற்சாலையின் அதிர்ஷ்டத்தை தீர்மானிப்பதில் இடத்தின் வடிவமும், அமைப்பும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த இடத்திற்கு தெரு தாக்கங்கள் இருந்தால் பாதிப்பு நிச்சயம் உண்டு. தெரு தாக்கத்தை ஆராய்ந்தே தொழிற்சாலைக்கான இடத்தை தேர்வு செய்யவேண்டும். தெருக்குத்து, தெருப்பார்வை, திருஷ்டி என்றால் என்ன? திருஷ்டி அல்லது குத்து என்றால் பார்வை என்ற பொருளை குறிக்கும். சாலையில் வருபவர்களின் பார்வையில் தொழிற்சாலை இருந்தால் அதை திசைக்குத்து அல்லது தெருக்குத்து என்பர். எத்திசையிலிருந்து வீதி வருகிறதோ அதை கொண்டு திசைக்குத்து ஏற்படுகிறது.
நமது ஊரில் சில பகுதிகளில் செல்லும்போது நல்ல எண்ணங்களும், பல பகுதிகளில் வெறுப்பான எண்ணங்களும் ஏற்படுவதை அனுபவத்தில் உணர்கிறோம். இதையே ஞானிகள், அறிஞர்கள் இத்திசையிலிருந்து வந்தால் இந்த மனநிலையில், அவர்கள் பார்வையின் பலாபலனும் இப்படித்தான் இருக்குமென கணித்துள்ளனர்.
நம் தொழிற்சாலைக்கு 8 திசையில் ஏதாவது ஒன்று, இரண்டு திசைகளில் வீதி இருக்கலாம். அதனால் தெருக்குத்து, தெருப்பார்வை ஏற்படுகிறது. வடகிழக்கு, வடக்கு திசையில் ரோடு இருப்பதால் கிழக்கு ஈசான்ய குத்து கிடைக்கிறது. இது செல்வ வளர்ச்சி, உற்பத்தி வளர்ச்சியை கொடுக்கிறது. வடக்கு திசையில் வீதி இருந்தால் ஈசான்ய வடக்குக்குத்து நற்பலனை கொடுக்கும். மேற்கில் தெரு இருந்தால் வாயு மூலை மேற்குக்குத்து ஏற்பட்டு காரியங்களில் வெற்றி, வழக்கில் வெற்றி ஏற்படும். தெற்கில் தெரு இருந்தால் (தென்மூலை) அதிர்ஷ்டம் அளிக்கும். பெண் தொழிலாளர்களால் முன்னேற்றம் மற்றும் கடன்கள் தீரும். வடமேற்கு வடக்கு பார்வை தீயதை அளிக்கவல்லது. மனக்குழப்பம்,
தோல்வி ஏற்படும். தொழில் நசுங்கும் நிலை ஏற்படும். தென்மேற்கு மேற்கு பார்வை மிகவும் தீயது. தொழில் போட்டி, தனவிரயம், புகழுக்கு களங்கம் ஏற்படும். தென்மேற்கு தெற்கு பார்வை துர்மரணத்தையும், தொழிலாளர்களின் முரட்டு குணத்தை குறிக்கும். தென்கிழக்கு, கிழக்கு பார்வை திருட்டு, விபத்து, ரோகங்களை கொடுக்கும். எனவே இதுபோன்ற தீய தாக்கமுள்ள இடங்களை தவிர்ப்பது நல்லது.
தெரிந்து கொள்ளுங்கள் ஈட்டுரிமையின்மை
பாகம் பிரிக்கப்படாத பங்கு பதிவதற்கு முன்பு ஈட்டுரிமையின்மை சான்றிதழை சரிபார்க்கவும். ஈட்டுரிமை(லிவீமீஸீ) என்பது சொத்தை ஈடாக்கி (சுவாதீனம்) வைத்திருக்கும் நபருக்கு சொத்தின் உரிமையாளர் சட்டப்பூர்வ கடனை தீர்த்து முடிக்கும் வரை சொத்தினை சட்டப்பூர்வமாக சுவாதீனத்தில் வைத்திருக்கும் உரிமையாகும். அடமானம் என்பது ஒரு பொதுவான ஈட்டுரிமை ஆகும். வழக்கமாக ஏதேனும் கடன் அல்லது கடமை பொறுப்புக்குட்பட்டு பணம் பெற்ற அனைத்து வீட்டுமனை அல்லது தனிநபர் சொத்தில் இந்த விதிமுறை பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது: இப்படிப்பட்ட ஒவ்வொரு பொறுப்பும் சொத்து மீதான ஈட்டுரிமை என்று அழைக்கப்படுகிறது.
அரிதாக சில வகையில் மட்டும், இது சில கடன் பொறுப்புகளை முடிக்கும்வரை ஈட்டுரிமை கொண்ட வேறொருவர் சொத்தை தடை செய்து வைக்கும் உரிமையாக வரையறுக்கப்படுகிறது. டெவலப்பர் நிதி நிறுவனங்களிலிருந்து திட்ட நிதி பெற்றிருந்த, ஒரு திட்டத்தில் நீங்கள் ஒரு அடுக்குமாடி வீடு வாங்கும்போது, பாகம் பிரிக்கப்படாத பங்கு பதிவு செய்வதற்கு முன்பு நிதி நிறுவனத்திலிருந்து உங்கள் அடுக்குமாடி வீட்டுக்காக பெற்ற ஒரு 'ஈட்டுரிமையின்மை சான்றிதழை' டெவலப்பர் அளித்துள்ளாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.