உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : திண்டீஸ்வரம்
ஊர் : திண்டுக்கல்
மாவட்டம் : திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
திருவிழா தொடங்க முன் அறிவிப்பாக மாசிமாதம் அம்மாவாசை முடிந்த 5-ம் நாள் கொடியேற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து 20 நாள்கள் சிறப்பாக விழா கொண்டாடப்படும். அதிகபட்சமாக ஒரு மாதம் வரை திருவிழா நடைபெறும்
தல சிறப்பு:
இந்த அம்மன் மற்ற தெய்வங்களை காட்டிலும் சிலையின் அடிப்பகுதி, பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்து இருப்பது சிறப்பாகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள் மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் - 624001. திண்டுக்கல் மாவட்டம்.
போன்:
-
பொது தகவல்:
சன்னதியின் உள்புறத்தில் நூழைவாயில் கம்பத்தடி அமைந்துள்ளது. தாமிரத்தால் கலந்து செய்யப்பட்டுள்ளது.
அம்மன் சன்னதியை ஒட்டி முன்புறம் தெற்குப்பக்கம் விநாயகர் கோவிலும், வடக்குப்பக்கம் மதுரைவீரன் சாமிகோயில், முன்புற வடக்கில் நவக்கிரங்கள், பின்பக்கம் தென்புறம் முனீஸ்வர சுவாமி சன்னதி, வடபுறம் கருப்பணசாமி சன்னதி உள்ளது.காளியம்மன் சிலை, துர்கை சிலை உள்ளது.
மேலும் விழாக்காலத்தில் சிம்மவாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம், ஆகிய வாகனங்களில் அம்மன் காட்சிதருவார்.
பிரார்த்தனை
இங்கு அம்மனை வேண்டிக்கொண்டால் குழந்தை வரம் கிடைக்கும். அம்மை, உடல் உறுப்புகள் குறைபாடுகள் நீங்குகின்றன. மற்றும் தீராத நோய்களும் குணமாகின்றன.
நேர்த்திக்கடன்:
நோய் நொடிகள் நீங்க மஞ்சளும், உப்பும் கொடி கம்பத்தடியில் இடுகிறார்கள். கொடி ஏற்றும் போது பெண்கள் புனித நீர் அபிஷேகம் நடத்துவர். இதன் மூலம் அம்மனின் கோபம் தணிந்து நாட்டுக்கு நன்மை தருவதாக ஐதீகம். தீச்சட்டி ஏந்திவருவது, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனுதினமும் வழிபட்டால் குழந்தைபாக்கியம் கிட்டும். அவ்வாறு நன்மை பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் சுமந்தும், மாவிளக்கு ஏற்றி கண்களில் வைத்தும் அம்மனை வழிபடுவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும். இதுபோன்ற பல்வேறு நேர்த்திகடனை செலுத்துவார்கள். இதுபோன்ற காலத்தில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் அம்மனை வழிபடுவார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாக திண்டுக்கல் உள்ளது. மேற்கு திசையில் மலையும், அதன் மீது கோட்டையும், அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோட்டை இன்றும் அழியாமல் உள்ளது.
இந்த கோட்டையிலிருந்து பழநிக்கு சுரங்கப்பாதை இருப்பதாகவும், இந்த வழியாக பல முறை திப்புசுல்தான் பழநிக்கு சென்றாகவும் வரலாறு கூறுகிறது. இந்த மலைக்கோட்டையின் அழகான பின்னணியில்தான் இந்த அம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோட்டையால்தான் அம்மனும் கோட்டை மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள்.
அம்மன் அமர்ந்த கோலத்தில் இத்தலத்தில் எழிலுற வீற்றிருக்கிறாள்.
8 கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், ஆகியவையும், இடது கையில் வில், கிண்ணம், பாம்பு, ஆகியவைகள் காணப்படுகின்றது.
தல வரலாறு:
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாகவும்' காவல் தெய்வமாக உள்ளது.
இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயில்கள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது. ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இந்த அம்மன் மற்ற தெய்வங்களை காட்டிலும் சிலையின் அடிப்பகுதி, பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்து இருப்பது சிறப்பாகும்.