0
ஆதார் என்பது இந்திய அரசின் சார்பில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் 12 இலக்க தனிநபர் அடையாள எண் ஆகும்.


இந்த எண் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படும்
பாலின மற்றும் வயது வேறுபாடு இன்றி , இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் உருவாக்கப்பட்ட சரிபார்ப்பு நடைமுறையை திருப்திகரமாக நிறைவு செய்யும் எந்த குடிமகனும் ஆதாருக்காக பதிவு செய்யலாம்.
ஒவ்வொரு தனி நபரும் ஒரே ஒரு முறை பதிவு செயுது கொண்டால் போதுமானது. இந்த பதிவு இலவசமாகும்.
ஒவ்வொரு தனி நபருக்கு வழங்கப்படும் ஒவ்வொரு ஆதார் எண்ணும் தனித்துவமானது ஆகும். இது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். வங்கி சேவை , செல்பேசி இணைப்பு மற்றும் பிற அரசு மற்றும் அரசு சாரா சேவைகளை பெற ஆதார் எண் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

ஆதர் அட்டை இந்தியாவில் கிட்டதட்ட அனைவருக்கும் வழங்கப்பட்டுவிட்டது. அதில் பலருக்கு பல திருத்தங்கள் தேவைபடுகிறது, சிலருக்கு பெயர் தவறாக இருக்கிறது, சிலருக்கு முகவரி தவறாக உள்ளது, சிலருக்கு பிறந்த தேதி தவறாக அச்சிட்டு உள்ளது.

ஆதர் அட்டையில் எதை  எதையெல்லாம் திருத்திக்கொள்ளலாம்?

பெயர்             Name
பாலினம்         Gender
பிறந்த தேதி    Date of Birth
முகவரி          Address
கைபேசி எண்: Mobile Number


இதை திருத்தம் செய்ய உங்களிடம் பாஸ்போர்ட், ரேஷன் கார்ட், பத்தாம் வகுப்பு மார்க் ஷீட், எலெக்சன் கார்ட் என ஒவ்வொரு திருத்தம்கும் நிரூபணம்(proof) தேவைப்படுகிறது. ஆனால் பாஸ்போர்ட் இருந்தால் அனைத்தையும் செய்து முடிக்கலாம், அதனால் பாஸ்போர்ட் கடைசி பக்கத்தை ஒரு ஸ்கேன் நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த பக்கம் செல்லுங்கள்: https://ssup.uidai.gov.in/web/guest/update



உங்கள் ஆதர் என்னை சரியாக அடித்து பின்னர் கேப்சாவையும் அடித்து Send OTP என்ற பொத்தானை அழுத்தினால் அடுத்த பக்கத்தில் உங்கள் மொபையில் எண் மற்றும் கேப்சா கேக்கும், இரண்டும் சரியாக கொடுத்து மீண்டும் send OTP அழுத்தினால் உங்கள் மொபைல் எண்னுக்கு ஒரு எஸ்‌எம்‌எஸ் வரும் அதில் உள்ள உறுதிபடுத்தல் எண்னை தளத்தில் அடித்து தொடர்ந்தால்‌. தளம் அடுத்த பக்கம் செல்லும் அங்கே நீங்கள் மாற்றவேண்டிய விவரங்களை பட்டியல் கொடுக்கப்பட்டு இருக்கும், நீங்க எதை மாற்ற விரும்புகிறீர்களோ அதை தேர்ந்தெடுத்து தொடருங்கள் அடுத்த பக்கத்தில் மாற்றவேண்டிய விவரங்களை சரியாக கொடுத்து வலது பக்கத்தில் பாஸ்போர்ட் ஸ்கேன் படத்தை இணையுங்கள். பிறகு proceed பொத்தானை அழுத்தி உறுதிப்படுத்துங்கள், இப்ப உங்களுக்கு ஒரு ரெப்பரன்ஸ் நம்பர் கிடைக்கும் அதை சேமித்து வெளியேறுங்கள்.

ஒரு சில வாரங்களில் உங்கள் திருத்தங்கள் மாற்றப்பட்டிருக்கும், அதனை மென்நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள், தேவைப்பட்டால் அதை பிரிண்ட் செய்தும் பயன்படுத்தலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top