0
மொட்டைத் தலையுடன் வரும் நபரைப் பார்த்ததும் நாம் கேட்கும் கேள்வி "திருப்பதியா? பழனியா?' அந்தத் திருத்தலங்களில் நேர்த்தியாக செலுத்தும் முடிகாணிக்கைச் சிறப்பினை இதன் மூலம் அறிய வருகிறோம். இங்கே ஒரு புலவர் மொட்டைத் தலையின் மகிமையை, அதன் சிறப்புகளை நயம்பட விளக்குகிறார்.

÷"காற்றுக்கு என்ன வேலி' என்பது போல கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக இருக்கும். முடி இருந்தால் சிக்கு இருக்கும்; அழுக்கு சேரும். அந்தச் சிக்கலெல்லாம் இல்லை. அழுக்கு சேராது. சண்டை போடுகிறோம். யாராவது தலைமுடியைப் பிடித்து ஆட்ட நினைத்தால் அவர்கள் செயல் ஈடேறாது. எண்ணெய் செலவு மிச்சம். பெண்கள் குட்டினாலும் கணீரென்று வெண்கலச் சத்தம் கேட்கும். எனவே, மொட்டைத் தலைக்கு நிகராகுமா முடித்தலை? என வினவுகிறார்.

கட்டுப் படாதுஉள் அழுக்கடை யாது கனத்த சண்டைக்கு

எட்டுக் கொடாது நல்லெண்ணெய் செல்லாது இளமாதர் பால்

குட்டுப்பட் டாலும் கணீரென்று கேட்கும் குவல யத்தில்

மொட்டைத் தலைக்கு நிகரோ முடித்தலை மூடர்களே!


கருத்துரையிடுக Disqus

 
Top