0
பயிரை சேதப்படுத்தும் புழுக்களை கட்டுப்படுத்த சில வழிமுறைகள்
தாக்குதலின் அறிகுறி

மொட்டு, பூ, பிஞ்சு, காய் இவை அனைத்தையும் கடித்து சேதப்படுத்தும் 
பயிரில் பூ எடுக்கும் சமையத்தில் தாக்குதல் அதிகம் தென்படும் ஒரு தாய்பூச்சி ஒரு பருவத்தில் 500 முதல் 600 முட்டைகள் வரை இடும் 40 சதவீதம் சேதாரத்தை ஏற்படுத்தும்.


உயிரியல் முறையில்
டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி கட்டலாம் ஒரு ஏக்கருக்கு 4 சிசி
( அந்து பூச்சி) ஒட்டுண்ணி குளவி, பச்சைபுழு எங்கெல்லாம் முட்டைகள் இட்டுள்ளது என்று தெரிந்து அந்த முட்டைகளை சாப்பிட்டு பொறிக்கவிடாமல் செய்துவிடும்
இனகவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு 4அல்லது 5 இடத்தில் வைக்கலாம்
பெண்பூச்சியின் வாடை இருப்பது போல் மாத்திரைகள் தயாரித்து இனக்கவர்சிப்பொறியில் வைத்து விட்டால் ஆண்பூச்சிகள் பெண்பூச்சிதான் உள்ளே இருக்கிறது என்று நினைத்து அதில் வந்து விழுந்துவிடும் அவற்றை நாம் எடுத்து அழிக்கலாம்

இவற்றை கட்டுப்படுத்துவது
கோடைஉழவு செய்து கூட்டுப்புழு பருவம், முட்டைகளை அழிக்கலாம்
ஊடுபயிர்கள் சாகுபடி செய்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்
வரப்பு பயிராக ஆமணக்கு சாகுபடி செய்து புரோட்டீனா புழுவை கவர்ந்து அழிக்கலாம். (ஏனென்றால் அவை விரும்பி சாப்பிடும் பயிர் ஆமணக்கு) பறவைகள் இருக்கைகள் அமர்த்தி ( கவ்வை குச்சிகள் வயலில் ஆங்காங்கே நட்டு ) புழுவை சாப்பிட வைக்கலாம் 





விளக்குப்பொறி ஒரு ஏக்கருக்கு ஒரு இடத்தில் வைக்கலாம்
தாவர இலைச்சாறு அல்லது பஞ்சகவ்யா ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்
அல்லது N V P கரைசல் ஒரு ஏக்கருக்கு 100 மில்லி தெளிக்கலாம் புழுக்கள் சாப்பிடாமல் நிறம்மாறி தலைகீழாக தொங்கும் அந்த புழுக்களை எடுத்து கசக்கி வைரஸ் கரைசல் நாமே தயாரிக்கலாம்

கருத்துரையிடுக Disqus

 
Top