0

சில சமயங்களில் நமது கணினியில் புதிய வந்தட்டை இணைப்போம். 500 GB என வாங்கி இணைத்தால் 466 GB எனக் காட்டும். இல்லையேல் 495 GB என இப்படி வேறு அளவில் காட்டும். ஏன் இந்த அளவு மாறுபடுகிறது என சிலருக்கு தெரிய வருவதில்லை. தெரியாதவர்களுக்கு மட்டும்.............

வந்தட்டின் அளவுகள், decimal-based numbers vs binary-based numbers ,ஆக இருப்பது ஒரு காரணமாகும். அதாவது வந்தட்டு தயாரிப்பவர்கள் 1000 bytes=1 kilobyte எனக் கணக்கிடுவார்கள். கணினியோ 1 kilobyte=1024 bytes எனக் கணக்கிடும்.தயாரிப்பளர்களின், Disk manufacturers system உம் கணினியின் operating system உம், கணக்கிடுவதில் வேறு முறையைக் கையாள்வது காரணமாகும்.

அடுத்து NTFS file system த்தில், Master File Table (MFT) என்ற கோப்புத் தகவல்களை (file information) சேமிக்க பொதுவாக மொத்த அளவில் 12.5 % த்தை எடுத்துக் கொள்கிறது.இந்த அளவு கணினியில் உள்ள பொறிமுறை பாவனையைப் பொறுத்து வேறுபடுகிறது.

தவிர இயங்குதளம் நிறுவப்பட்ட பின்னர்,
விண்டோஸ் 7,8 போன்றவற்றில், System Reserved Partition என்ற பெயரில் மறைக்கப்பட்ட பகுதி ( hidden partition) பெயரில்லாது(no letter) உருவாக்கப்படுகிறது.இதில் BitLocker encryption முறையில்,boot configuration database, Windows Recovery Environment என்பவை சேமிக்கப்படுகின்றன. இதுவும் கணினி பொறிமுறைக்கு ஏற்ப கணினிக்குக் கணினி வேறுபடுகிறது.பொதுவாக இயங்குதளம் நிறுவும் போது,மேலதிகமாக விண்டோஸ் 7 ல் 100 MB ம் விண்டோஸ் 8 இல் 350 MB அளவையும் எடுத்துக் கொள்ளும்.

இன்ஸ்டால் செய்த Page file ,எடுத்துக் கொள்ளும் அளவு,
hibernation, the Hiberfils.sys அக்டிவ் செய்வதால் RAM அளவில் ஒரு பகுதி எடுக்கப்படுகிறது.
Backup செய்யும் போதும்,Restore செய்யும் போதும் எடுக்கும் 3-5% அளவு,
இயங்குதளம் update,upgrade செய்யும் போது system files களை backup செய்யும் அளவு என, வந்தட்டில் அதிக இடத்தை எடுத்து விடுகிறது. இவை அனைத்தும் சரிசெய்யக் கூடியவைதான்.
…...............
கணினியில் மறைந்திருக்கும் சில- hidden tools.........
Math Input Panel
Private Character Editor - eudcedit
sticky notes
Snipping Tool
Sound Recorder
Windows Disc Image Burner
Malicious Software Removal Tool
Speech Recognition
Problem Steps Recorder
God Mode

கருத்துரையிடுக Disqus

 
Top