0


நாம் அனைவரும் "Rain rain go away, Come again another day" என்கிற பாடலை நம் வீட்டுக் குழந்தைகள் படிக்கிற போது பார்த்து மகிழ்கிறோம்.  தினமும் அந்த பாடலை படிக்கிறபோது "இன்று போய் என்றைக்குத்தான் மழை வர வேண்டும்".   இந்த எண்ண ஆற்றலினால்தான் மழை குறைந்து பஞ்சம் வருகிறது என்று கூறுவார் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.   அதற்கு மாற்றாக கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது.

குழந்தைப் பாடல் மழையே வந்திடு!

மழையே மழையே வந்திடு

மண்ணில் வந்து விழுந்திடு!

உழவே செழிக்க வந்திடு

உயிரைக் காக்க வந்திடு!

பச்சை கொஞ்சி வயலிலே

பயிர்கள் செழிக்க வந்திடு!

இச்சை கொண்டு மக்களே

இனிதே வாழச் செய்திடு!

தாகம் தீர்க்க வந்திடு

தாயாய் வந்து நின்றிடு!

மேகம் திரண்டு வானிலே

மின்னல் இடியுடன் வந்திடு!

கானல் நீக்க வந்திடு

கங்கை, பொன்னியில் வந்திடு!

வேனல் போக்க இன்பமே

வீற்றி ருக்க வந்திடு!

காடு செழிக்க வந்திடு

கனிகள் கொடுக்க வந்திடு!

நாடு செழிக்க வைத்திடு

நல்ல மழையே வந்திடு!

கருத்துரையிடுக Disqus

 
Top